பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார் - பிரதமர் அலுவலகம் நேற்று இரவு திடீர் அறிவிப்பு.!

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார் - பிரதமர் அலுவலகம் நேற்று இரவு திடீர் அறிவிப்பு.!

Update: 2020-06-30 01:36 GMT

பிரதமர் அலுவலகம் நேற்று இரவு வெளியிட்டுள்ள டுவிட்டர் மூலமான அறிவிப்பில் " பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நாளை ( ஜூன் 30) அதாவது இன்று மாலை 4 மணிக்கு உரையாற்றுகிறார் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டதை நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தொற்று பரவலை தடுக்க பொதுமக்களுடன் இணைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அவற்றின் அவசியங்கள் குறித்தும் ஏற்கனவே 5 முறை பொது மக்களுடன் பிரதமர் பேசியுள்ளார்.

முதன் முறையாக கடந்த மார்ச் மதம் 19 ந்தேதி கொரோனா தொற்று குறித்து பேசிய அவர், மார்ச் 22 ந்தேதி ஒரு நாள் பொது முடக்கம் அறிவித்தார்.

அதன்பிறகு மார்ச் 24 ந்தேதி பேசினார். அப்போது 21 நாள் பொது முடக்கத்தை அறிவித்த அவர் அதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். பின்னர் ஏப்ரல் 3 ந்தேதி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் களப்பணியாளர்களை கவுரப்படுத்டும் விதமாக ஏப்ரல் 5 ந்தேதி வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பின்னர் ஏப்ரல் 14- ந்தேதி ஆற்றிய உரையில் மே -3 ந்தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பபடுவதாக அறிவித்தார். இறுதியாக கடந்த மே 12 ந்தேதி ஆற்றிய உரையில் நாட்டின் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்க ரூ. 20 இலட்சம் கோடி மதிப்பில் சிறப்பு நிதி தொகுப்பை அறிவித்திருந்தார்.

இடையில் சென்ற ஞாயிற்றுக் கிழமை மன்கிபாத் உரையில் கொரோனாவால் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள் அதிகம் பேர் ஏழை எளிய மக்களே என்று வருத்தத்துடன் பேசினார். சீன எல்லை பிரச்சினையில் எதிரிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று ஜூன் 30 மாலை 4 மணிக்கு பேச உள்ளதாக அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் சீன எல்லையில் ஏற்பட்ட பிரச்சனைகளை தொடர்ந்து அது தொடர்பாகவும் முதன்முதலாக அவர் மக்களிடையே நேரிடையாக தொலைகாட்சியில் பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

Similar News