சீனாவுக்கு கொடுத்த 4ஜி சேவை கருவிகள் கொள்முதலுக்கான டெண்டர்கள் அதிரடி ரத்து : இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு.!

சீனாவுக்கு கொடுத்த 4ஜி சேவை கருவிகள் கொள்முதலுக்கான டெண்டர்கள் அதிரடி ரத்து : இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு.!

Update: 2020-07-02 02:15 GMT

இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் சீனாவால் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்தியா, சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.

இந்த சம்பவத்துக்குப்பின் இந்தியாவில் சீனாவுக்கு எதிரான மனநிலை மக்கள் மனதில்ஏற்பட்டத. சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷமும் நாடெங்கும் வலுத்து வருகிறது. மேலும், மத்திய அமைச்சர்கள் சிலரும் வெளிப்படையாகவே சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று முழக்கமிட்டுள்ளனர். ரயில்வே அமைச்சகமும் சமீபத்தில் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஒரு ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம், தனது 4 ஜி அலைவரிசை விரிவாக்கத்தில் சீனக் கருவிகளையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய தகவல் தொலைத் தொடர்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பாதுகாப்புப் பிரச்னைகள் இருப்பதால் சீன உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் இதுதொடர்பாக டெண்டரை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது இது தொடர்பான முந்தைய டெண்டர்கள் அனைத்தையும் பி.எஸ்.என்.எல். ரத்து செய்துள்ளது.

இந்திய நிறுவனங்களுக்கு அதிகம் வாய்ப்பு அளிக்கும் வகையில் 4ஜி கருவிகளுக்கான புதிய டெண்டர் கோர திட்டமிட்டுள்ளது. 4ஜி அலைவரிசை விரிவாக்க பணிகளில் தேவைகளை மறுஆய்வு செய்வதற்காக தொலைத்தொடர்பு துறை ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

இந்த குழு அறிக்கையை தாக்கல் செய்த அடுத்த இரண்டு வாரங்களில் புதிதாக டெண்டர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய டெண்டர்களில் சீனாவின் எந்த ஒரு நிறுவனமும் பங்கேற்க முடியாத கட்டுப்பாடுகள் விதிக்கப்படகூடும் என தெரிகிறது. 

Similar News