இந்திய-சீன மோதல்: 43 சீன வீரர்கள் உயிரிழப்பு/காயம் என வட்டாரங்கள் தகவல்.! #IndiaChina

இந்திய-சீன மோதல்: 43 சீன வீரர்கள் உயிரிழப்பு/காயம் என வட்டாரங்கள் தகவல்.! #IndiaChina

Update: 2020-06-17 01:48 GMT

லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதல் பதற்றத்தை தணிக்க முயன்ற போது இரு தரப்பினரும் "வன்முறை மோதலில்" உயிரிழந்ததாக இந்திய ராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்ட பின்னர், அத்தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகமும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது . மேலும் சீனா ஒருதலைப்பட்சமாக எல்லைக்கோட்டில் நிலைமையை(status quo) மாற்ற முயற்சித்ததால் கிழக்கு லடாக்கில் வன்முறை மோதல் நடந்ததாகவும் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இரு தரப்பினரும் உயிரிழப்புகளை சந்தித்தனர். ஒரு பட்டாலியனின் ஒரு கமாண்டோ அதிகாரி உட்பட 3 வீரர்கள் வீர மரணம் அடைந்துவிட்டதாக இந்தியா முன்னர் அறிவித்திருந்தாலும், சீனா இறுக்கமாக இருந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மறைப்பதின் மூலம் தனது பக்கத்தை பாதுகாக்க முயன்றது.

இப்போது, ​​இரு தரப்பிலும் உயிரிழப்புகள் முன்னர் ஊகிக்கப்பட்டதை விட அதிகமாக இருந்தன என்பதை அரசாங்க வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.

இந்தியாவில் 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது, 43 சீன வீரர்கள் உயிரிழந்ததாக கருதப்படுகிறார்கள், அரசாங்க வட்டாரங்கள் ஊடக நிறுவனமான ANI க்கு தெரிவிக்கின்றன.

கால்வான் பள்ளத்தாக்கில் நேருக்கு நேர் நடந்த மோதலில் இறந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்தவர்கள் உட்பட 43 பேர் உயிரிழந்ததாக இந்திய இடைமறிப்புகள் தெரிவிக்கின்றன என்று ANI தெரிவித்துள்ளது. 



கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய படைகளுடன் மோதிய போது அவர்கள் சந்தித்த இழப்புகளை அழைத்து/எடுத்து செல்ல ஹெலிகாப்டர் வரத்துகள் அதிகரித்திருப்பதாகவும் ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 



Similar News