ஒரே சமயத்தில் 49 பேருடன் வீடியோ கால் செய்யும் வசதி : மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய அறிமுகம்.!
ஒரே சமயத்தில் 49 பேருடன் வீடியோ கால் செய்யும் வசதி : மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய அறிமுகம்.!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ் சேவையில் விரைவில் ஒரே சமயத்தில் 49 பேருடன் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட உள்ளது. டீம்ஸ் சேவையில் 7*7 வடிவில் 49 பேருடன் வீடியோ கால் பேசும் வசதி வழங்கப்பட இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ் சேவை ஜூம் மற்றும் இதர வீடியோ கால் சேவைகளுக்கு போட்டியை ஏற்படுத்தி வருகிறது. போட்டியை மேலும் கடுமையாக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.
துவக்கத்தில் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களை குறிவைத்து துவங்கப்பட்ட டீம்ஸ் சேவையில் தற்சமயம் ஆஃபிஸ் 365 ப்ரோடக்டிவிட்டி சூட் மூலம் தகவல் பரிமாற்றத்திற்கான முக்கிய சேவையாக உருவெடுத்து வருகிறது.