50 ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வீரராக ராகுல் டிராவிட் தேர்வு.!

50 ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வீரராக ராகுல் டிராவிட் தேர்வு.!

Update: 2020-06-25 12:00 GMT

கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வீரர் என ராகுல் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியா டெஸ்ட் வரலாற்றில் சிறந்த வீரர்கள் யார் என்பதைப் பற்றி விஸ்டன் இந்தியா என்கிற இணையதளம் கடந்த வாரம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. அந்த கருத்துக் கணிப்பில் சச்சின், ஷேவாக், கங்குலி, டிராவிட், எம்எஸ் தோனி, விராட் கோலி உள்பட 16 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இதில் கடைசியாக சச்சின், டிராவிட், கோலி, கவாஸ்கர், புஜாரா, லட்சுமன், குண்டப்பா விஸ்வநாத், சேவாக் என எட்டு பேர் முன்னிலை வகித்தனர். இந்த 8 பேரில் அரையிறுதிக்கு சச்சின், கோலி, டிராவிட், கவாஸ்கர் சென்று உள்ளனர். அடுத்து அந்த நான்கு பேரில் சச்சின், டிராவிட் இறுதிக்கு சென்றுள்ளனர். மூன்றாவது இடத்தை விராட்கோலி பெற்றார்.

இருவரில் யார் சிறந்த வீரர் என இறுதி கருத்துக்கணிப்பில் 11,400 ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் 52 சதவீதம் ஓட்டுக்கள் பெற்று சிறந்த டெஸ்ட் வீரர் என ராகுல் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பின்பு 48 ‌சதவீதம் ஓட்டுக்கள் பெற்று இரண்டாவது இடத்திதிற்கு சச்சின் டெண்டுல்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 13,288 ரன்கள் உள்பட 36 சதம் அடித்துள்ளார். சச்சின் 200 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 15,921 ரன்கால் ரன்கள் உள்பட 51 சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

இதனை பற்றி விஸ்டன் இந்தியா கூறியது: டிராவிட் அவருடைய விளையாட்டு வாழ்க்கையில் சிறப்பாக பேட்டிங் செய்ததால் வாக்கெடுப்பில் கண்ணியமான முன்னிலை பெற்றார். பின்னர் இறுதியில் சச்சினை முந்தினர்.  

Similar News