500 பேருடன் கூத்தாடி பிறந்தநாள் கொண்டாடிய கும்மிடிப்பூண்டி செம்மரக் கடத்தல் புகழ் தி.மு.க தலைவர்! கொரோனா தொற்றை நூற்றுக்கணக்கானோருக்கு பரப்பிய பரிதாபம் - மு.க.ஸ்டாலினின் பதில் என்ன?

500 பேருடன் கூத்தாடி பிறந்தநாள் கொண்டாடிய கும்மிடிப்பூண்டி செம்மரக் கடத்தல் புகழ் தி.மு.க தலைவர்! கொரோனா தொற்றை நூற்றுக்கணக்கானோருக்கு பரப்பிய பரிதாபம் - மு.க.ஸ்டாலினின் பதில் என்ன?

Update: 2020-06-22 02:40 GMT

கொரோனா ஊரடங்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஜீன் 30 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் புது தொற்றுக்கள் கண்டறியப்பட்டு வருவதால் நிலைகுலைந்து போயுள்ளது தமிழகம். எந்த இடத்திலும் அதிகம் பேர் கூட வேண்டாம் என தமிழக அரசு மன்றாடி கேட்டு வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கு விதிகள் அத்தனையையும் மீறி கும்மிடிப்பூண்டியில் செம்மரக் கடத்தலுக்கு புகழ்பெற்ற கும்பல் மற்றும் ரவுடிகள் 500 பேருடன் சேர்ந்து தனது 50-வது பிறந்தநாளை குத்தாட்டத்துடன் கொண்டாடியுள்ளார் ஒரு தி.மு.க பிரமுகர். இது அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இது போதாது என்று இந்த குத்தாட்டத்திற்உ அடுத்த நாளே இந்த தி.மு.க. பிரமுகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தற்போது ஆயிர்க்கணக்கானவர்கள் கொரோனா பாதிப்பின் பிடியில் சிக்கியுள்ளனர் என்ற பரிதாப செய்தியும் வெளியாகி அப்பகுதியில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த தி.மு.க பிரமுகர் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த தி.மு.க பொதுக்குழு உறுப்பினரும், ஒன்றிய குழு துணைத் தலைவருமான குணசேகர். இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தோட்டத்தில் தனது 50-வது பிறந்தநாளை ரவுடி மற்றும் செம்மரக் கடத்தல் கும்பலுடன் சுமார் 500 பேர் சேர்ந்து மதுபாட்டில்களோடு கொண்டாடி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தி.மு.க திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் கும்மிடிப்பூண்டி வேணுவின் வலது கரம் என சொல்லப்படுபவர் தான் இந்த செம்மரக் கடத்தல் தொழில் செய்யும் குணசேகர். இவர் தி.மு.க பொதுக்குழு உறுப்பினராகவும், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவராகவும் தற்போது உள்ளார்.

ஆறு வருடங்களுக்கு முன், செம்மரக் கடத்தல் வழக்கில் சிறைக்கு சென்றவர் என்பது இவரின் கூடுதல் சிறப்பு. இவரது தோட்டத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கான மது பாட்டில்கள், பிரியாணி, மட்டன், சிக்கன் என தடபுடலாக குத்தாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த கூத்தாட்ட விருந்தில் தி.மு.க திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் வேணுவின் மகன் உள்ளிட்ட பல தி.மு.க நிர்வாகிகள் கலந்துக் கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.


இதனையடுத்து, பிறந்த நாள் கொண்டாடிய குணசேகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் மூலமாக இந்த கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட ரவுடிகள் உட்பட தி.மு.க நிர்வாகிகள் 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

விஷயம் வெளியில் கசிந்தால் தான் நடவடிக்கைக்கு உட்படலாம் என்ற பீதியில் இது சம்பந்தப்பட்ட அனைவரையும் தலைமறைவாக இருக்க சொல்லியிருக்கிறாராம் தி.மு.க மாவட்டச் செயலாளர் வேணு.


இந்நிலையில் மதுக்கடைகள் ஊரடங்கின் போது மூடப்பட்டு இருக்கிம் நிலையில் இந்த கும்பலுக்கு எப்படி நூற்றுக்கணக்கான மது பாட்டில்கள் கிடைத்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது 15 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில் மேலும் நூற்றுக்கணக்கானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அதற்கு பொறுப்பேற்பது யார்? தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினா? மாவட்ட செயலாளர் வேணுவா? அல்லது எப்போதும் போல் இழிச்சவாய் தமிழக மக்களா?

மு.க.ஸ்டாலின் வாய்க்கிழிய வசனங்கள் பேசி வரும் வேளையில், தன் கட்சியினர் தற்போது நூற்றுக்கணக்கானவர்களுக்கு தொற்று பரவ காரணமாக இருந்துள்ளதை உணர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா? அறிக்கைகள் விடுவாரா? இல்லை எதுவும் நடக்காதது போல் கடந்து செல்வாரா? என்ற கேள்வி தற்போது மக்களிடையே எழுந்துள்ளது.

Similar News