டிக்டோக், ஹலோ உட்பட 59 சீன ஆப்களுக்கு இந்திய அரசு அதிரடி தடை - ஏன்?

டிக்டோக், ஹலோ உட்பட 59 சீன ஆப்களுக்கு இந்திய அரசு அதிரடி தடை - ஏன்?

Update: 2020-06-29 16:10 GMT

இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றை கெடுக்கும் நோக்கில் பாரபட்சமற்ற செயல்களில் கீழ் கண்ட பயன்பாடுகளிக் கொண்ட 'ஆப்' கள் ஈடுபட்டுள்ளன என்றும் அவற்றை தடை செய்வதாகவும்" கூறியுள்ளது.

இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் சிபாரிசின் பேரில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக ஒழுங்கு முறை விதிகள் 69(a) படி கீழ் கண்ட ஆப்களை தடை செய்துள்ளதாகவும் மேற்படி அமைச்சகம் அறிவித்துள்ளது.

59 ஆப்கள் தடை

அதன்படி டிக்டோக் , ஷேர் இட், க்வாய், யு சி ப்ரவ்சர் , பைடு மேப், ஷீன், க்லாஷ் ஆப் கிங்ஸ், டி யு பேட்டரி சேவர், ஹெலோ, லிகீ, யு கேம் மேக் அப் உள்ளிட்ட 59 ஆப்கள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தடை செய்யப்பட்ட 59 ஆப்கள் முழு விவரம் மேலே.


Similar News