59 சீன செயலிகளுக்கு மத்திய அரசின் எச்சரிக்கை.! #ChinaApps #BannedApps #CentralGovt

59 சீன செயலிகளுக்கு மத்திய அரசின் எச்சரிக்கை.! #ChinaApps #BannedApps #CentralGovt

Update: 2020-07-22 02:39 GMT

தடை செய்யப்பட்ட டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் தொடர்ந்து செயல்பட்டால், நிறுவனங்கள் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக தடை செய்யப்பட்ட செயலிகளின் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில், இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதன் காரணமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட செயலிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து கிடைப்பது மற்றும் செயல்படுவது சட்டவிரோதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்நிறுவனங்களுக்கு 79 கேள்விகளை அடங்கிய பட்டியலை அனுப்பி இருந்த மத்திய அரசு, இன்றைக்குள் பதிலளிக்காவிட்டல், 59 செயலிகளும் இந்தியாவில் நிரந்தரமாக தடை செய்யப்படும் என தெரிவித்து இருந்தது.

Similar News