எல்லை பிரச்சினைகளில் ராகுல் காந்தி மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை : 61 சதவீம் இந்தியர்கள் கருத்து.!

எல்லை பிரச்சினைகளில் ராகுல் காந்தி மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை : 61 சதவீம் இந்தியர்கள் கருத்து.!

Update: 2020-06-24 02:15 GMT

கடந்த வாரம் லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதலில் ஒரு கர்னல் உட்பட 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் சில கேள்விகளை முன்வைத்து ஏபிபி மற்றும் சி வோட்டர் நிறுவனங்கள் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.

இந்த கணிப்பில் வெளியான விவரங்கள்: 72.6 சதவீதம் பேர் இப்பிரச்னையில் பிரதமர் மோடி தலைமை மீது நம்பிக்கை இருப்பதாக தெரிவித்து உள்ளனர். மேலும் 68 சதவீதம் பேர் பாகிஸ்தானை விட இந்தியாவுக்கு சீனா ஒரு பெரிய பிரச்னையாக இருப்பதாக நம்புவதாக தெரிவித்து உள்ளனர்.

32 சதவீம் பேர் மட்டுமே பாகிஸ்தான் தான் அதிக கவலை தருவதாக கூறி உள்ளனர்.

சீனா மீது இந்தியா உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளதா என்ற கேள்விக்கு 60 சதவீதம் பேர் இன்னும் எடுக்க வேண்டும் என்றும், 38 சதவீதம் பேர் மட்டுமே உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினர்.

எல்லை நெருக்கடியை கையாள்வதில் பிரதமர் மோடிக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கும் இடையேயான வேறு பாடு குறித்த கேள்விக்கு 61 சதவீம் பேர் ராகுல் மீது நம்பிக்கை இல்லை என கூறி உள்ளனர். 

Similar News