ஜம்மு காஷ்மீரில் முதன்முதலாக 6,600 வெளி மாநிலத்தவர்களுக்கு குடியேற்றச்சான்று - இனி அவர்கள் அங்கு வீடு,நிலம், வேலை வாங்கலாம்.!

ஜம்மு காஷ்மீரில் முதன்முதலாக 6,600 வெளி மாநிலத்தவர்களுக்கு குடியேற்றச்சான்று - இனி அவர்கள் அங்கு வீடு,நிலம், வேலை வாங்கலாம்.!

Update: 2020-07-05 06:41 GMT

ஜம்மு காஷ்மீரில் ஏற்கனவே அமலில் இருந்த 370 சிறப்பு சலுகை திட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அம்மாநிலத்துக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டது. அத்துடன் அங்கு நீண்ட காலமாக குடி இருந்துவந்த மற்ற மாநில குடி மக்களுக்கும் புதிதாக குடியேற்ற சான்றுகள் கடந்த ஒரு வாரமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஜம்மு பிராந்தியத்தில் இதுபோன்ற 5,900 க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன, இதுபோன்ற 700 சான்றிதழ்கள் காஷ்மீர் பிரிவில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஜம்முவின் பஹு தெஹ்ஸில் மட்டும் கிட்டத்தட்ட 3,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அவர்களில் 2,500 க்கும் மேற்பட்டோர் கூர்க்கா சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

விண்ணப்பதாரர்களில் பலர் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 1957 ஆம் ஆண்டில் பஞ்சாப்பில் இருந்து அழைத்துவரப்பட்ட உள்ளூர் துப்புரவுத் தொழிலாளர்களான இவர்கள் தங்களுக்கு குடியுரிமை கேட்டு பல ஆண்டுக் காலமாக போராடி வந்தனர்.

ஒட்டுமொத்தமாக, நிர்வாகம் ஏற்கனவே குறைந்தது 33,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது மற்றும் ஒரு நாளைக்கு சராசரியாக 200 விண்ணப்பங்களைப் பெற்று வருகிறது.

சென்ற வாரம் ஜூன் 26 ந்தேதியன்று , நவீன் குமார் சவுத்ரி என்கிற பீகாரைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி முதல் குடிமகனானார். ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தில் 26 ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இனி இவர்களும் இவர்களது சந்ததியினரும் மற்ற காஷ்மீரிகள் போல அங்கு வீடு, நிலம் வாங்கலாம், மாநில அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  

https://swarajyamag.com/insta/over-6600-receive-jk-domicile-in-a-week-retired-soldiers-officials-from-gorkha-community-biggest-beneficiaries

Similar News