கொரோனா வைரஸின் முந்தைய கால வசூலில் 80 சதவீதத்தை எட்டிய சுங்கக் கட்டண வசூல் - பொருளாதாரம் புத்துயிர் பெறுகிறதா?
கொரோனா வைரஸின் முந்தைய கால வசூலில் 80 சதவீதத்தை எட்டிய சுங்கக் கட்டண வசூல் - பொருளாதாரம் புத்துயிர் பெறுகிறதா?;
இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) கீழ் வசூலிக்கப்படும் நெடுஞ்சாலை சுங்கவரி, கொரோனா வைரஸ் பரவலுக்கு முந்தைய காலத்தின் சுங்க வரியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளது. இது பொருளாதார நடவடிக்கைகள் தற்போது புத்துயிர் பெறுவதற்கு அடையாளமாகும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இது தவிர, மார்ச் முதல் வாரத்தின் 88 சதவீதத்தை ஒப்பிடும் போது சுங்கவரியில் வணிக மற்றும் கனரக வாகனங்களின் பங்கு 91 சதவீதமாக உயர்ந்துள்ளது.
NHAI கீழ் இயங்கும் 679 சுங்கச்சாவடிகளில், 571 சுங்கச்சாவடிகள் தற்போது இயங்கி கட்டணத்தை வசூலிக்கின்றது.
"சுங்கக்கட்டண வசூல் கிட்டத்தட்ட 80 முதல் 82 சதவீதத்தை எட்டியுள்ளது. மேலும் சுங்கவரிகள், பயணிகள் மற்றும் வணிக வாகனங்களின் போக்குவரத்தை பொருத்தது, கட்டுப்பாடு தளர்வுகளுக்குப் பிறகு அவை அதிகரித்து வருகிறது. போக்குவரத்து சீராக இருப்பதை நாங்கள் கவனித்து வருகிறோம்." என்று NHAI தலைவர் S S சந்து கூறியுள்ளார்.
"மார்ச் முதல் வாரத்தில் சராசரி பரிவர்த்தனை 57.1 லட்சமாகவும், ஒரு நாளைக்குச் சுங்க வசூல் 90 கோடியாக இருந்தது. கடந்த வாரங்களில் சராசரி வசூல் 40.4 லட்சமாகவும் ஒரு நாள் வசூல் 72 கோடியாக இருந்தது இதில் பாஸ்டாக் மற்றும் பண பரிவர்த்தனைகளும் அடங்கும்". என்று NHAI தெரிவித்தது.
தினசரி வசூலில் குறைவு ஏற்பட்டாலும், நெடுஞ்சாலைகளில் வணிக மற்றும் கனரக வாகனங்களின் அதிக பங்கு காரணமாக மீண்டும் சுங்க வசூல் உயர்ந்து வருகிறது.