நாம் தேவாலயம், மசூதி சென்றாலும் அனைவருக்கும் இந்து வம்சாவளி தான் - முகமது பைஸ் கான் ராமர் கோவில் பூஜையில் பங்கேற்க 800 கி.மீ நடந்து செல்லும் முஸ்லீம் பக்தர்.! #Rammandhir #RamarTemplePooja

நாம் தேவாலயம், மசூதி சென்றாலும் அனைவருக்கும் இந்து வம்சாவளி தான் - முகமது பைஸ் கான் ராமர் கோவில் பூஜையில் பங்கேற்க 800 கி.மீ நடந்து செல்லும் முஸ்லீம் பக்தர்.! #Rammandhir #RamarTemplePooja

Update: 2020-07-28 02:58 GMT

"நாம் அனைவரும் தேவாலயத்திற்குச் சென்றாலும் மசூதிக்குச் சென்றாலும் நாம் அனைவருக்கும் இந்து வம்சாவளி வந்தவர்கள்" தான் என சத்தீஸ்கரை சேர்ந்த முகமது பைஸ் கான் என்கிற முஸ்லீம் நபர் தெரிவித்துள்ளார், மேலும் 800 கி.மீ நடந்து சென்று அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்து கொள்ள உள்ளார்.

மத்திய பிரதேசத்தின் அனுப்பூரை அடைந்த முகமது பைஸ் கான், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில்,

"நான் மதத்தினால் ஒரு முஸ்லீம், ஆனால் நான் ராமரின் பக்தன். நம் முன்னோர்களைப் பற்றி நாம் ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் இந்துக்கள். அவர்களின் பெயர்கள் ராம்லால் அல்லது ஷியாம்லால் என இருக்கலாம். நாம் அனைவரும் தேவாலயத்திற்குச் சென்றாலும் மசூதிக்குச் சென்றாலும் நாம் அனைவருக்கும் இந்து வம்சாவளி வந்தவர்கள் தான்.

எங்கள் மூதாதையர் ராமர். அல்லாமா இக்பால் என்ற பாகிஸ்தானின் தேசிய கவிஞர் இதை விளக்க முயன்றார், அவர் சரியான பார்வையை கொண்டவர்,. ராமரை இந்தியாவின் கடவுளாக கருத வேண்டும் என்று கூறினார். இந்த பயபக்தியுடன், சந்த்குரி என்னும் கவுசல்யாவின் பிறந்த இடத்திலிருந்து அயோத்திக்கு மண்ணை எடுத்துச் செல்கிறேன், அதை பூமி பூஜையின் போது அர்பணிப்பேன் என்று அவர் கூறினார்.

மதம் கடந்த பக்தியின் அடையாளமாக, ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்து கொள்ளும் இந்த முஸ்லிம் பக்தர், சத்திஸ்கர் மாநிலத்தின் சந்த்குரி கிராமமத்தை சேர்ந்தவர். இந்த சந்த்கூரி கிராமம் ராமரின் தாய் கவுசல்யாவின் பிறப்பிடமாக நம்பப்படுகிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் முகமது பைஸ் கான் பகவான் ராமரின் பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News