சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் குணம்.!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் குணம்.!

Update: 2020-07-21 10:10 GMT

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2,551 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் சென்னை. சென்னையில் இதுவரை 87,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 14,56 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சென்னையில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் மற்ற மாவட்டங்களில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.  

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 15,127 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதன் விகிதம் 17 சதவீதம் ஆகும். மேலும், கொரோனாவால் 70 ஆயிரம் பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இதன் ஒட்டுமொத்த விகிதம் 81% ஆகும். பின்னர் இறப்பு விகிதம் 1.67 சதவீதமாக உள்ளது. மேலும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 81 ஆக குறைந்துள்ளது.  

Similar News