முன்னாள் குடியரசு தலைவர் Dr. அப்துல்கலாம் அவர்களின் கனவை நிறைவேற்ற அமல்படுத்தப்பட்ட மத்திய அரசின் திட்டம்!
முன்னாள் குடியரசு தலைவர் Dr. அப்துல்கலாம் அவர்களின் கனவை நிறைவேற்ற அமல்படுத்தப்பட்ட மத்திய அரசின் திட்டம்!
2001 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கிராமப்புறங்களில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 74.2 கோடி(72.25%). அம்மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றம் பெறவேண்டும் என்பதே 2002-2007-ல் இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக இருந்த Dr.A.P.J.அப்துல்கலாம் அவர்களின் கனவாக இருந்தது. அதற்காக அவர் PURA(Provision of Urban amenities in Rural Areas) என்ற ஓர் திட்டத்தை பற்றி, தனது 2003 ஆம் ஆண்டின் குடியரசு தின உரையின்போது முன்மொழிந்தார். PURA பற்றிய அவரது உரையின் தமிழாக்கம்: "நான் இந்தியாவின் கிராமப்புற பகுதிகளை கண்ட வரையில், அங்கு இருக்கும் இணைப்புகளின் அளவு (Connectivity) போதுமானதாக இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இணைப்புகள் என்று நான் இங்கு குறிப்பிடுவதில் 4 அம்சங்கள் உள்ளன. அவை:
1. கிராமப்புறங்களில் சாலைகள் அமைப்பதன் மூலம் கிராமப்புற பகுதிகளை நாட்டின் மற்ற பகுதிகளோடு இணைத்தல் (Physical connectivity).
2. நம்பகத்தன்மை கொண்ட தகவல்தொடர்பு சேவைகளை ஏற்படுத்தி மின்னணு முறையில் இணைத்தல் (Electronic connectivity).
3. சிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி கூடங்களை ஏற்படுத்தி அறிவுசார் இணைப்பை உருவாக்குதல் (Knowledge connectivity).
4. இவை மூன்றையும் ஒருங்கிணைத்து செயல்படுத்திவதன் மூலம் பொருளாதார இணைப்பை உருவாக்குதல் (Economic connectivity)".
அன்றைய பாரத பிரதமர் திரு.அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், Dr.அப்துல்கலாம் அவர்களின் திட்டத்தினை ஆமோதித்து, அதே ஆண்டில் தனது சுதந்திர தின உரையில் PURA திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவெடுத்திருப்பதாக கூறினார். பின் அத்திட்டம் 7 மாநிலங்களில் சில குறிப்பிட்ட பகுதிகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு, 2004-ஆம் ஆண்டு நாட்டின் பல்வேறு கிராமப்புறங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் செயல்படுத்தப்பட்ட அதே ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் தோற்கடிக்கப்பட்டு, காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றது. அதன்பிறகும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அன்றைய பிரதமர் Dr. மன்மோகன் சிங் தெரிவித்தார். இருப்பினும் தனது கனவுத்திட்டமான PURA பற்றி Dr.அப்துல்கலாம் அவர்கள் "Target 3 Billion" என்ற புத்தகத்தில் 2011 ஆம் ஆண்டு விவரித்து எழுதியிருந்தார். இந்நிலையில் 24 பிப்ரவரி 2012 அன்று, அன்றைய Rural Development Minister திரு.ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் Dr.அப்துல்கலாம் அவர்களின் PURA திட்டத்தை கடுமையாக விமர்சித்ததோடு , அத்திட்டம் படுதோல்வி அடைந்ததாக அறிவித்தார். பின் PURA திட்டத்தின் சில அம்சங்களை மாற்றியமைத்து, Restructured PURA என தொடங்கிவைத்தார். ஆனால் அரசின் ஒத்துழைப்பின்மையால் அத்திட்டமும் தோல்வியை தழுவியதாக அறிவிக்கப்பட்டது.