தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிப்பதை எதிர்க்கும் மனுக்களின் விசாரணை தள்ளி வைப்பு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிப்பதை எதிர்க்கும் மனுக்களின் விசாரணையை தள்ளி வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏ.டி.ஆர் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன . சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது இந்த மனுக்கள் தொடர்பாக பதில் அளிக்க அவகாசம் தேவை என மத்திய அரசின் சார்பில் கோரப்பட்டது .
அரசியல் சாசன அமர்வு விசாரணை நடைபெறுவதால் இந்த மனுக்களை மே மாதம் விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்த போது ஏப்ரல் மாதமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என மனதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட் மனுக்கள் மீதான விசாரணையை ஏப்ரல் பதினோராம் தேதிக்கு தள்ளி வைத்ததுடன் இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதா என்பது குறித்தும் ஆராயப்படும் என்று தெரிவித்தது.