மேற்கு வங்கம் : பா.ஜ.க தொண்டர் தூக்கு - திரிணாமூல் காங்கிரசில் சேர மறுத்ததால் கொலையா?

மேற்கு வங்காளத்தில் மற்றொரு பாஜக தொண்டர் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது அதிர்ச்சியளித்துள்ளது.

Update: 2020-07-30 07:38 GMT

மேற்கு வங்க பா.ஜ.க MLA தேவேந்திர நாத் ராய் தனது வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு பூட்டிய கடையின் முன் தூக்கில் தொங்கிய சம்பவம் நடந்து, சில வாரங்களுக்குப் பிறகு மேற்கு வங்காளத்தில் பூர்ண சந்திரா தாஸ் என்ற மற்றொரு பாஜக தொண்டர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது அதிர்ச்சியளித்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் உள்ள கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில், கடந்த புதன்கிழமை அன்று 44 வயதுடைய பூர்ண சந்திரா தாஸ் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததாக உள்ளூர் மக்களால் கண்டறியப்பட்டுள்ளார். அவர் ராம்நகர் ஏரியாவில் பா.ஜ.கவின் பூத் பிரசிடெண்ட் ஆவார். இறந்தவரின் குடும்பமும் மற்றும் உள்ளூர்வாசிகளும் பாஜக தொண்டரான அவர் திரிணாமூல் காங்கிரசில் சேர மறுத்ததால் அக்கட்சியை சேர்ந்த ரவுடிகளால் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்துகின்றனர்.

அவர் குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், திரிணாமூல் காங்கிரசில் சேர சொல்லி சமீபகாலமாக தாஸை அக்கட்சியினர் வற்புறுத்தி வந்ததாக குறிப்பிடுகின்றனர். ஆனால் அவர் விருப்பபடவில்லை என்றும் புதன் கிழமை மதியம் உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என்றும் அன்று சாயங்காலமே அவரைத் தூக்கில் தொங்கியவாறு தாங்கள் கண்டறிந்ததாகவும் உண்மை இந்த விஷயத்தில் வெளிவர வேண்டும் என்றும் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறினார். 



இதையடுத்து பா.ஜ.க உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் மம்தா பானர்ஜி தலைமையில் இயங்கும் திரிணாமுல் காங்கிரஸ் மீது சமூக வலைதளங்களில் கடுமையான குற்றச்சாட்டுகளை வீசினர். திரிணாமுல் காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து இது அரசியல் ரீதியாக கூறப்படுவதாகும் என்றும் இதில் எந்த உண்மையும் இல்லை என்று மறுத்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் மிக நீண்ட காலமாகவே அரசியல் படுகொலைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆனால் சமீபகாலமாக பா.ஜ.க தலைவர்கள் மேற்கு வங்கத்தில் கொலை செய்யப்படுவது அதிகரித்து உள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் மூத்த பா.ஜ.க தலைவரும் எம்எல்ஏவுமான தேவேந்திர நாத் ராய் அவரது வீட்டிற்கு அருகில் ஒரு கடையின் முன்னால் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டறியப்பட்டார். அதையும் ஒரு படுகொலை என்று அதன் தலைவர்களும் கட்சி தொண்டர்களும் கூறிவந்தனர்.

இழப்பிற்கு ஒரு வாரத்துக்குப் பிறகு மற்றொரு அதிர்ச்சியூட்டும் சம்பவமாக பா.ஜ.க பூத் ப்ரெசிடெண்ட்டின் 15 வயது தங்கை கற்பழிக்கப்பட்டு விஷம் கொடுக்கப்பட்டார். இந்த குற்றத்தை செய்த குற்றவாளிகள் அவருடைய உடம்பை அவருடைய வீட்டின் அருகில் உள்ள ஆளில்லாத இடத்தில் போட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர். அந்தப் பெண் ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் மயக்கமுற்ற நிலையில் கண்டறியப்பட்டார். இதற்கு பா.ஜ.க மேற்கு வங்காளத்தை ஆட்சி செய்து வரும் திரிணாமுல் காங்கிரஸின் தொண்டர் பாயிஸ் அலி மீது குற்றம் சுமத்தியது. ஆனால் காவலர்கள் பின்னர் போஸ்ட் மார்ட்டம் செய்த போது அந்தப் பெண் கற்பழிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

Similar News