தனிமைப்படுத்தும் மையங்களை விமர்சித்து பேசிய அசாம் எம்.எல்.ஏ கைது..

தனிமைப்படுத்தும் மையங்களை விமர்சித்து பேசிய அசாம் எம்.எல்.ஏ கைது..

Update: 2020-04-07 13:53 GMT

சீனாவில் வூஹான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் உலக முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் இதுவரை 76 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலும் பரவி 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் மிக அதிகமாக பரவி வருகிறது.

மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி வரும் வேலை நடந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தி சிகிக்சை கொடுக்கும் மையங்களை விமர்சித்த அசாம் எம்.எல்.ஏவை காவல்துறையினர் கைது செய்தனர்.

அசாமில் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற கட்சியின் எம்.எல்.ஏ அமினுல் இஸ்லாம். இவர் அசாமில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிக்சை கொடுக்கும் மையங்களை விமர்சித்து அண்மையில் எம்.எல்.ஏ பேசியுள்ளார். அதில் அவர் கூறியது: தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்கும் மையங்கள் சட்டவிரோதமாக செயல்படும் போல் மையங்கள் செயல்படுகின்றது.

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் அசாம் வந்த பின் அவர்களை அவதூறாக பேசுகிறார்கள். மேலும் அறிகுறி இல்லாதவர்களை ஊசி போட்டு நோயாளி போல் காட்டுகிறார்கள் என விமர்சித்தார்.

இவர்கள் பேச்சிக்கு பல பேர் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே திங்கள் இரவு இவரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவல்துறையினர் செவ்வாய் காலை முறைப்படி கைது செய்தனர். 

Source : https://www.dinamani.com/india/2020/apr/07/assam-mla-held-for-comments-on-covid-19-quarantine-centres-3396186.html

Similar News