"இந்தியா என்பது ஒரே தேசம்" : புலம்பெயர் அசாம் மக்களை மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசாங்கங்கள் கைவிட்டதாக ஹிமாந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு.! #Assam
"இந்தியா என்பது ஒரே தேசம்" : புலம்பெயர் அசாம் மக்களை மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசாங்கங்கள் கைவிட்டதாக ஹிமாந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு.! #Assam
அசாம் மாநில சுகாதார அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா வெளிமாநில மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தும் சில மாநிலங்களின், குறிப்பாக டெல்லி மற்றும் மகாராஷ்டிராவின் நடத்தையைக் குறித்து தன் அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை, தொடர் டீவீட்டுகளில் தங்கள் சொந்த மாநில மக்களைப் பார்த்துக் கொள்வது போலவே, வெளி மாநிலங்களிலிருந்து வந்து வசித்து, வாழ்வாதாரம் பெற்று, பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் மக்களையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அவர் மேலும் அசாம் மாநில அரசு, தங்கள் மாநிலத்தில் வசிக்கும் தேவைப்படும் அனைவருக்கும் மருத்துவ உதவிகள் அளிக்கும் என்று கூறினார். "இந்தியா ஒன்று. நம் குடிமக்கள் ஒன்று. இந்த நிலத்தில் யாரும் வெளி நபர் இல்லை. அற்பமான அடிப்படையில் மக்களைப் பிரிக்க வேண்டாம்." என்று அவர் கூறினார்.
#WorkersWoes Our revered and hard-working people from Assam, Bihar and West Bengal have worked with great passion yet in wake of #COVID pandemic they have been left to fend for themselves. How insensitive of Governments in Maharashtra and Delhi to have done this discrimination.
— Himanta Biswa Sarma (@himantabiswa) June 4, 2020
டைம்ஸ் நவ் சேனலுக்கு அளித்த பேட்டியில் டெல்லியும் மஹாராஸ்ட்ராவும் ஆரம்பத்திலேயே சோதனைகளை அதிகரித்திருந்தால், வைரஸ் பரவுவதை முன்னமே கண்டறிந்து பரவலைத் தடுத்திருக்க முடியும் என்றார். மேலும் "எங்கள் மாநிலத்தை சேர்ந்தவர்களை வேலை வாய்ப்புகளுக்காக உங்கள் மாநிலத்திற்கு அழைக்கிறீர்கள், அவர்களும் உங்கள் தொழில் நிறுவனங்களுக்கும், பொருளாதாரத்திற்கும் தங்கள் பங்கை அளிக்கிறார்கள். ஆனால் பிரச்சனை என்று வரும் போது இரண்டாம் தர மக்களாக நடத்துவது என்ன நியாயம்? 'புலம் பெயர் தொழிலாளர்கள்' என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? அசாம் மக்களை புலம் பெயர் தொழிலாளர் என்று கூறி மஹாராஷ்டிராவும், டெல்லியும் கைவிட்டு விட்டது. இந்தியா எல்லாருக்கும் ஆனது இல்லையா? " என்று விளாசித் தள்ளினார்.