மும்பை : மசூதியில் இருந்த அசான் ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைக்கும் படி கேட்ட இளம்பெண்ணுக்கு கும்பலாக மிரட்டல்.! #Azan #Speaker @KarishmaBhosal3

மும்பை : மசூதியில் இருந்த அசான் ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைக்கும் படி கேட்ட இளம்பெண்ணுக்கு கும்பலாக மிரட்டல்.! #Azan #Speaker @KarishmaBhosal3

Update: 2020-06-27 14:17 GMT

மும்பையில் மன்கர்ட் பகுதியை சேர்ந்த பெண், பக்கத்தில் உள்ள மசூதியின் அசான் சத்தத்தைக் குறைக்கக் கோரியதால் அந்தப் பகுதியில் வசிக்கும் முஸ்லில்களால் தொந்தரவு செய்யப்பட்டார்.

கரிஷ்மா போசலே என்ற பெண் தன் வீட்டு ஜன்னலுக்கு எதிராக வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் அசான் சத்தம் பலமாக இருந்ததையடுத்து அதைக் குறித்து புகார் செய்ய மசூதிக்கு சென்றார். ஆனால் அங்கு சென்ற போது, கும்பலாக கோபமான முஸ்லிம்கள் அவரை சூழ்ந்து கொண்டு அவரை மிரட்ட ஆரம்பித்தனர். 



கரிஷ்மா, என்ன நடந்தது என்பதை தொடர்ச்சியான ட்வீட்கள் மூலமும், விடியோக்கள் மூலமும் வெளிப்படுத்தினார். போலீஸ் அதிகாரிகள் அங்கே இருந்த போது கூட கும்பல் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பத் தொடங்கினர்.

கும்பலை சமாதானப் படுத்திய போலீஸ் அந்தப் பெண்ணை மசூதிக்கு வெளியே அழைத்து சென்றனர். அப்போது சிலர், 'மசூதி என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா?' எனக் கத்துவது கேட்கிறது.

அந்தப் பகுதி MLA அபு ஆஸ்மியிடம் இதைக் குறித்து அந்தப் பெண் புகார் அளித்த போது, அசான் சத்தத்துடன் அந்தப் பெண்ணுக்கு பிரச்சினை இருந்தால் ஏரியாவை விட்டு காலி செய்யுமாறுக் கூறியதாக ஒரு வாட்ஸ் ஆப் மெசேஜையும் கரிஷ்மா காண்பித்தார். 



அந்தப் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கும் படி பலரும் வேண்டுகோள் விடுத்த நிலையில், விஜய வாஹினி, பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து அமைப்புகள் கரிஷ்மாவுக்கு பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. 



அசான் என்பதை மனிதர்கள் அறிவிக்கலாம் என்றும் ஒலிப்பெருக்கிகள் மூலம் அறிவிக்கக்கூடாது என்றும் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Similar News