லெபனான்: பயங்கர குண்டுவெடிப்பில் 73 பேர் உயிரிழப்பு.! பிரதமர் மோடி இரங்கல்!

லெபனான்: பயங்கர குண்டுவெடிப்பில் 73 பேர் உயிரிழப்பு.! பிரதமர் மோடி இரங்கல்!

Update: 2020-08-05 12:34 GMT

"பெய்ரூட் மற்றும் லெபனானின் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் 73 மக்கள் உயிரிழந்துள்ளனர், 4000 பேர் காயமடைந்துள்ளனர், இந்த துயரமிகுந்த சம்பவம் அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரத்தைத் தருகிறது," என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அவரது ட்விட்டில் "இந்த துயரமிகுந்த சம்பவத்தில் தத்தளித்து கொண்டிருக்கும் மக்களுக்கும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும் எங்கள் பிரார்த்தனைகள் இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

நேற்று, பெய்ரூட் தலைநகரமான லெபனானில் ஏற்பட்ட பயங்கரமான குண்டுவெடிப்பு அங்கிருந்த கேமெராவில் பதிவாகியுள்ளது. அந்நிகழ்வில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அதிர்ச்சியூட்டும் காட்சியாக, அந்நகரத்தில் ஏற்பட்ட குழப்பங்களும், கட்டிடங்கள் நடுங்குவதையும், மக்கள் அதன் நடுவே தத்தளித்துக் கொண்டிருப்பதைக் காட்டியது.

துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பானது பெய்ரூடில் இதுவரை ஏற்பட்ட மிகப்பெரிய குண்டுவெடிப்பாகும். அதன் சத்தம் அதனைச் சுற்றியுள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிழக்கு மத்தியதரை தீவான சிப்ரஸ் 240 கிலோமீட்டர் தொலைவு தாண்டி கேட்கப்பட்டது என்று AFP நிறுவனம் செய்தி தெரிவித்துள்ளது.

வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணங்கள் ஏதும் அறியப்படவில்லை, ஆனால் துறைமுகத்தில் வெடிபொருள்கள் சேகரித்து வைத்திருந்ததாகப் பாதுகாப்பு தலைவர் அப்பாஸ் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

"குண்டுகளுக்குத் தேவைப்படும் உரங்கள் மற்றும் அம்மோனியம் நைட்ரைட் போன்றவை 2,750 டன் துறைமுகத்தில் ஆறுவருடங்களாக எந்தவித பாதுகாப்பும் இன்றி சேமித்து வைக்கப்பட்டுள்ளது, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது," என்று லெபனானின் ஜனாதிபதி மைக்கேல் அவுன் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அவசரக்கூட்டம் பின்னர் லெபனான் பேரழிவு நகரமாக அறிவிக்கப்பட்டது.

உலகில் பல்வேறு இரங்கல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், "இந்த வெடிப்பு குறித்து முதன்மை அமைச்சகத்திடம் ஆராய்ந்தபோதும் குண்டுவெடிப்பானது ஒரு தாக்குதலாகவே தோன்றுகிறது," என்றார்.

Similar News