மணம் சுவை திடம் - இவை மட்டுமா டீ? இதற்குள் இவ்வளவு விசயங்கள் உள்ளதா ?

மணம் சுவை திடம் - இவை மட்டுமா டீ? இதற்குள் இவ்வளவு விசயங்கள் உள்ளதா ?

Update: 2020-07-05 02:24 GMT

"மாலை நேரம், மழை தூறும் காலம், ஜன்னல் ஓரம் நிற்கிறேன்" என்கிற பாடல் வரிகள் படத்தில் எந்த சூழ்நிலைக்கு பொருந்தியதோ இல்லையோ, ஒரு கோப்பை தேநீருக்கு வெகு பொருத்தம். உடலுக்கு இதம் தருகிறது என்றும், இன்னும் சற்று அறிவியல் ரீதியாக ஆராய்ந்தால் புற்று நோயை தடுக்க வல்லது, மாரடைப்பை குறைக்க வாய்ப்பு உள்ளது, வயோதிகம் அடைவதை சற்று ஒத்தி போடலாம் என பல பயன்களை தேநீர் தரும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒரு மனிதனால் மட்டுமல்ல தேநீரால் கூட முடியாதது எதுவுமில்லை என நிருபிக்க முனைந்த வேடிக்கையான ஆய்வாளர்கள் சிலர் தேநீர் குடிப்பதற்கு மட்டுமன்றி வேறு எதற்கெல்லாம் பயன்தரும் என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள்

அழுகையால், தொடர் வேலையால் இன்னும் பல காரணங்களால் சோர்ந்த கண்களுக்கு ஐஸ்கட்டிகள், வெள்ளரியை போலவே, டீபேக்கும்(tea bag) சிறந்த நிவராணி என்கிறார்கள். சூடான நீரில் டீபேக்குகளை முக்கி சற்று குளிர்வித்து கண்களில் மீது வைத்தால் கண்களுக்கும் நமக்கும் உற்சாகம் பிறக்குமாம்

கண்ணாடி குடுவையின் மீது படிந்திருக்கும் கை ரேகைகளை அழிக்க வல்லதாம். டீ பேக்குகளை(tea bag) கொண்டு ரேகைகள் படிந்த கண்ணாடி பொருள்களை தேய்ப்பதாலும், பின்பு பாலில்லாத தேநீரை அதன் மீது பீய்ச்சியடித்து சுத்தம் செய்வதாலும் படிந்திருக்கும் கரைகள் மரையுமாம்.மீன் சாப்பிட்ட வாசம் உங்கள் கைகளை விட்டு போக வேண்டுமா? பாலில்லாத தேநீரால் உங்கள் கைகளை கழுவ சொல்கிறார்கள்.

வாய்புண்களை குறைக்கும் திறன் டீ பேகுக்கு உண்டு என்கிறார்கள். வாயில் புண் ஏற்பட்டால் உபயோகித்த டீ பேக்கை கடித்தால். தேநீரின் இயல்பான பண்பால் வலி குறைவதோடு, வாயில் ரத்தம் கசிந்தால் அது நிற்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.பருக்கள் மறைவதற்க்கு குளிர்ந்த பாலில்லாத தேநீரில் முகம் கழுவ பரிந்துரைக்கிறார்கள்.

உங்கள் செல்ல பிராணிகளை பூச்சிகள் தொந்தரவு செய்யாமல் இருக்க, அவர்கள் உறங்குகிற போது சில தேநீர் இலைகளை அவர்களை சுற்றி போட்டு வையுங்கள். பூச்சிகள் எளிதில் அண்டாது.மேலும் கூந்தலுக்கு கருமையை கூட்ட, தீக்காயங்களுக்கு தீர்வாக, வீட்டின் நறுமண பொருளாக பயன்படுத்த என நீள்கிறது தேநீரின் பயன்பாட்டு பட்டியல்.

இதன் உண்மை தன்மை இன்னும் பரிசோதனைநிலையிலேயே உள்ளது. "ஆனாலும் கூட நம்ம டீ தானே, தினம் குடிப்பது தானே" என அலட்சியத்தோடு நாம் கடந்து போகிற ஒரு கோப்பை தேநீருக்குள் இத்தனை வித பரிணாமங்கள் இருப்பது. நம் எண்ணங்களை நிச்சயம் விரிவடையசெய்கிறது.

சிந்திக்கையில். நம்மை தினசரி பார்ப்பவர்கள், நம்மிடம் அன்றாடம் பழகுபவர்கள் நம் இருப்பை அலட்சியமாக கடக்ககூடும். எத்தனை நாட்கள் தான் இருக்கும் நிலையிலேயே நம்மை வெளிகாட்டி கொள்வது? நம்மின் பிற பரிமாணங்களை அவர்களுக்கு உணர்த்தும் மும் நம்மை நாமே புரிந்து கொள்ளவ்ம் நம் திறன்களை வெளிகொணரவும் வேண்டும் என்கிற உற்சாகத்தை வழங்கியிருக்கிறது இந்த வித்தியாச தேநீர். குடிப்பதற்க்கு மட்டுமல்ல படிப்பதற்க்கும் சுவரஸ்யமாக இருக்கிறது இந்த டீ............ 

Similar News