கேரள கடத்தல் தங்கம் CAA எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டதா? #AntiCAA #Kerala #Smuggling #NIA

கேரள கடத்தல் தங்கம் CAA எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டதா? #AntiCAA #Kerala #Smuggling #NIA

Update: 2020-07-24 14:42 GMT

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் புதிய திருப்பமாக கடத்தல் தங்கத்தின் மூலம் திரட்டப்பட்ட பணம் நாடு முழுவதும் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என்று மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை செய்து வருகின்றன. கடத்தல் தங்கத்தை விற்பனை செய்து திரட்டப்பட்ட நிதி கடந்த டிசம்பர்-பிப்ரவரி மாதங்களில் நடந்த போராட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என மத்திய உள்துறை அமைச்சகம் ஆராய்ந்து வருவதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக கேரள காவல்துறை அளித்த தகவலின் பேரில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்ட ஒரு இளைஞர் CAA எதிர்ப்பு போராட்டங்களுக்கு நிதி திரட்டிய விதம் குறித்த முக்கியமான தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த போராட்டங்களுக்கான நிதி ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களுக்கு நிதி வழங்கிய வளைகுடா நாடுகளில் இருக்கும் அமைப்புகளுடன் இரண்டு கேரள இளைஞர்களுக்கு தொடர்பு இருப்பதை மத்திய புலனாய்வு நிறுவனங்கள் கண்டறிந்துள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சாட்சியங்களை ஆராய்ந்ததில் போராட்டங்களுக்கு நிதி திரட்ட உபயோகிக்கப்பட்ட ஆதாரங்களில் கடத்தல் தங்கமும் ஒன்று என்று தெரிய வந்துள்ளதாக புலனாய்வு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் கேரள டிஜிபி லோக்நாத் பெஹேரா, வளைகுடா நாடுகளில் இருக்கும் அமைப்புகளுடன் சில கேரள அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவை கேரள இளைஞர்களை தேச விரோத செயல்களில் ஈடுபடும் வகையில் தவறான வழியில் ஊக்குவிப்பதாகவும், இது குறித்த தகவல்கள் மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் பகிரப்பட்டுள்ளன என்றும் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் கேரளாவில் நடக்கும் தங்கக் கடத்தல் தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்தே இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. சுங்கத் துறை அதிகாரிகளுக்கு எண்ணிலடங்கா அழைப்புகள் வருவதாகவும், பலரும் தங்கக் கடத்தல் பற்றிய தகவல்களை பகிர தயாராக இருப்பதாகக் கூறுவதாகவும் கூறப்படுகிறது.

ஒரு பக்கம் எங்கே தேசிய புலனாய்வு முகமை தங்களை விசாரணைக்காக அழைக்க வருமோ என்ற அச்சத்தால் பலர் முன் வரலாம் என்று எண்ணப்பட்டாலும் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகளிடம் இருந்து விசாரணையை திசை திருப்ப தவறான தகவல்களைத் தரும் முயற்சியாக இது இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எவ்வாறாயினும் கேரள அரசியல்வாதிகளைக் கதிகலங்கச் செய்திருக்கும் இந்த வழக்கால் கேரள முதல்வர் பினராயி விஜயனை பதிவி விலகக் கோரும் குரல்கள் அதிகரித்துள்ளன.

நன்றி: ஸ்வராஜ்யா

Similar News