"நாங்கள் எந்த ஆவணங்களையும் மீடியாவுக்குத் தரவில்லை' என அமலாக்கத்துறையினர் மறுத்தார்கள். சிதம்பரத்தின் ஐந்துநாட்கள் சி.பி.ஐ. காவலில் அவர் ஒருசில விஷயங்களைத்தான் ஒப்புக்கொண்டுள்ளார். அவரை மும்பைக்கு கொண்டு செல்ல வேண்டும். மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா கம்பெனி முதலாளிகளான இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருடன் ப.சிதம்பரத்தை நிற்க வைக்கவேண்டும். இந்திராணியும் பீட்டரும் சிதம்பரம் மீது எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கு சிதம்பரம் என்ன பதில் சொல்கிறார் என்பதை பதிவு செய்ய வேண்டும் என கோர்ட்டில் சிதம்பரம் காவலை நீட்டிக்க கோருவதே சி.பி.ஐ.யின் திட்டம்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் மொரீஷியஸ் நாட்டிலிருந்து 305 கோடி ரூபாயை கொண்டுவர இந்திராணியும் பீட்டரும் விண்ணப்பித்தார்கள். பீட்டர் முகர்ஜி பிரிட்டனை சேர்ந்தவர் என்பதால் அவர் மொரீஷியசிலிருந்து பணம் கொண்டு வர இந்திய சட்டம் அனுமதிக்காது என அதிகாரிகள் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தனர். Fair Growth Financial Services Limited போர்டின் தலைவர் சிதம்பரத்தையும் கார்த்தி சிதம்பரத்தையும் இந்திராணி தம்பதியினர் சந்தித்தனர். கார்த்தி சிதம்பரத்தின் வங்கிக் கணக்கில் ஒரு மில்லியன் டாலரை கட்டியவுடன் எஒடஇ தலைவரான சிதம்பரம், பீட்டர் முகர்ஜியின் வெளிநாட்டு பிரஜை என்கிற தகுதியை புறந்தள்ளி 305 கோடி ரூபாயை கொண்டு வர அனுமதித்தார் என Fair Growth Financial Services Limited அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக சி.பி.ஐ. கோர்ட்டில் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். எனவே, சிதம்பரம் இந்த வழக்கில் தப்ப முடியாது என்கிறது சி.பி.ஐ. வட்டாரம்.
அமலாக்கத்துறையைச் சேர்ந்தவர்களிடம் பேசும்போது, "எந்த மொரீஷியஸ் நாட்டிலிருந்து இந்திராணி 305 கோடி ரூபாயை கொண்டு வந்தாரோ அந்த மொரீஷியஸ் நாட்டிற்குத்தான் சிதம்பரம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணம் சென்றிருக்கிறது' என்கிறார்கள். சிதம்பரத்திற்கு உதவியவர்களில் முக்கியமான வங்கிகளின் உயர் அதிகாரிகளும் இருக்கிறார்கள். சிதம்பரத்தின் குடும்ப உறுப்பினரான சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்தான் மூல காரணமாக இருந் துள்ளார். அவரையும் விரைவில் கைது செய்வோம்' என்கிறார்கள் அமலாக்கத் துறையைச் சேர்ந்தவர் கள்.
"இவர்தான் பணத்தை மொரீஷியஸ் நாட்டில் உள்ள போலி கம்பெனி களின் பெயரில் முதலீடு செய்தவர். வெறும் லெட் டர்பேடு கம்பெனிகளின் மூலமாக ஆயிரக்கணக்கான கோடிகள் இந்தியாவிலிருந்து அனுப்பப்படும். அந் தப் பணத்தை பயன்படுத்தி உலகின் பல இடங்களில் தனது சமூகத்தைச் சேர்ந்த வியாபார பிரமுகர்கள் மூலம் ப.சிதம்பரம் சொத்து வாங்கியுள்ளார்.
இங்கிலாந்தின் தலைநக ரான லண்டன் மாநகரில் ஒரு ஹோட்டலை வாங்கி யுள்ளார். அதன் மொத்த பரப்பளவு மூன்றரை ஏக்கர். அதேபோல் ஜெர்மனி நாட்டிலுள்ள ப்ராங்க்பர்ட் நகரிலும் சொத்துக்களை வாங்கி யுள்ளார்சிதம்பரம் . லண்டனில் கார்த்தி சிதம்பரம் வாங் கிய ஓட்டலை கண்டுபிடித்து அமலாக்கத்துறை அதை சிதம்பரம் மீதான வழக்கில் இணைத்துவிட்டது' என்கிறார்கள் அமலாக்கத்துறையினர். இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமி மீது கொடநாடு கொலைகள் தொடர்பான விவரங்களை வெளிக்கொணர்ந்த புலனாய்வுப் பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல், மேற்கு வங்காள முதல்வர் மம்தாவை நேரடியாக குற்றம்சாட்டிய சாரதா சிட்பண்ட் ஊழலை வெளிக்கொணர்ந்தார்.
அதில் சாரதா சிட்பண்ட், மக்களை ஏமாற்றிய பணத்திலிருந்து 120 கோடி ரூபாயை அந்நிறுவனம் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திற்கு அளித்தது என குற்றம்சாட்டினார். சாரதா சிட்பண்ட் உரிமையாளர் சிறையில் இருக்கிறார், ஆனால் நளினி வெளியில் இருக்கிறார். விரைவில் சாரதா சிட்பண்ட் ஊழலும் தூசி தட்டி எடுக்கப்பட்டு நளினி சிதம்பரத்திற்கு எதிராகப் பாயும்'' என்கிறார்.
சி.பி.ஐ. கஸ்டடிக்குப் பிறகு சிதம்பரத்தை திகார் ஜெயிலுக்கு அனுப்புவதில் தீவிரமாக இருக்கின்றனர் அமலாக்கத்துறையினர்.
இந்நிலையில் சமீபத்தில் நளினி சிதம்பரத்தின் உறவினரும் தி.மு.க வின் பிரமுகருமான கோடீஸ்வரர் தற்கொலை செய்து கொண்டதில் சந்தேகம் இருப்பதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. இவ்வழக்கை சிபிஐ கையில் எடுக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. இதனால் திமுகவின் சில தலைகளும் பிடிப்படலாம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.