சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மறுபடியும் கொரானா - சந்தைகள், பள்ளிகளை மூடிய சீன அரசு.! #China #Beijing #Corona

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மறுபடியும் கொரானா - சந்தைகள், பள்ளிகளை மூடிய சீன அரசு.! #China #Beijing #Corona

Update: 2020-06-13 12:02 GMT

சீன தலைநகர் பெய்ஜிங்கில் இந்த வாரம் புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் விளைவாக வெள்ளிக்கிழமையன்று அதிகாரிகள் ஆறு பெரிய மொத்த உணவு சந்தைகளையும், சில குடியிருப்புப் பகுதிகளையும் அடைத்தனர்.

உள்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுகளை ஏற்கனவே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக சீனா கூறியிருந்த நிலையில், இப்போது புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டிருப்பது தொற்றுநோய் மீண்டும் பரவும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.

பெய்ஜிங்கில் கடந்த இரண்டு மாதங்களாக கொரானா தொற்றுகள் இல்லை என சீனா கூறி வந்தது. வெள்ளிக்கிழமை ஆறு புதிய தொற்றுகள் பெய்ஜிங்கிலும், மற்றொரு தொற்று வியாழக்கிழமையன்றும் கண்டறியப்பட்டுள்ளன.

நகர அதிகாரிகளின் கூற்றுப்படி, பெய்ஜிங்கின் ஃபெங்டாய் மாவட்டத்தில் உள்ள இறைச்சி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டு பேரும் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் கொரோனா வைரஸ் கேரியர்களை தொடர்பு கொள்ளவில்லை. அவர்கள் இப்போது உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்ற மூன்று நோயாளிகள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளையும் உள்ளூர் அரசு பூட்டியுள்ளது. நோயாளிகள் இருவரும் உள்ளூர் ஜின்ஃபாடி இறைச்சி மொத்த சந்தை மற்றும் ஜிங்ஷென் கடல் உணவு சந்தைக்கு சென்றிருந்ததாகத் தெரிய வந்தவுடன், கிருமிநாசினி தெளிக்கவும் மற்றும் சுற்றுச்சூழல் மாதிரி சேகரிப்புக்காகவும் அவை வெள்ளிக்கிழமை மூடப்பட்டுள்ளன.

பெய்ஜிங்கின் கல்வி ஆணையம், திங்களன்று முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குத் திரும்புவதை ரத்து செய்ததாகக் கூறியது - இது சுமார் 5,20,000 மாணவர்களைப் பாதிக்கும்.

இதற்கிடையில், பெய்ஜிங் அதிக எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளது மற்றும் இரண்டு நாட்களுக்குள் நகரத்தில் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டதால்,புதியதாக பரவுவதைத் தடுக்க அவசரகால நடவடிக்கைகள் தயாராக உள்ளது.

உலகின் பிற பகுதிகளுக்கு தொற்றுநோய் பரப்பிய வுஹான் கொரோனா வைரஸின் மையமாக விளங்கும் சீனா, முன்னர் அந்த நாட்டில் 84,000 நோய்த்தொற்றுகள் மட்டுமே காணப்பட்டதாகவும், கொரோனா வைரஸால் 4,600 க்கும் மேற்பட்ட இறப்புகள் மட்டுமே காணப்பட்டதாகவும் கூறியிருந்தது.இருப்பினும், சீன அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் உலகின் பிற பகுதிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன, இதன் விளைவாக சீன அரசின் கூற்றுக்களின் நம்பகத்தன்மை குறித்து பரவலான சந்தேகம் எழுந்துள்ளது. சீனாவில் கூட, சீன கம்யூனிஸ்ட் கட்சி எண்களை வெளியிட்ட பின்னர் மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளது.

கூடுதலாக, ஒரு சீன இராணுவத்தால் நடத்தப்படும் பல்கலைக்கழகத்தின் டேட்டாபேஸ் கசிவு, கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட நபரின் எண்ணிக்கை குறித்து சீனா கூறிய சந்தேகத்திற்குரிய எண்களை அம்பலப்படுத்தியது, கசிந்த தகவல்கள் குறைந்தது 6,40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

Cover Image Courtesy: Economic Times

Similar News