புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. ரகசிய சந்திப்புகள்.. இந்திய எதிர்க்கட்சிகள் - சீன கூட்டணி விவகாரங்கள்.! #China #Congress #Communists
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. ரகசிய சந்திப்புகள்.. இந்திய எதிர்க்கட்சிகள் - சீன கூட்டணி விவகாரங்கள்.! #China #Congress #Communists
இந்திய சீன மோதலைத் தொடர்ந்து இந்திய எதிர்க்கட்சிகள் தங்களிடமும் விவகாரங்களை பகிர்ந்து கொண்டு பிரதமர் மோடி முடிவெடுக்க வேண்டும் எனக் கோரி வருகின்றன. ஆனால் அவ்வாறு செய்யும் அளவுக்கு அவர்கள் நம்பிக்கைக்கு உரியனவாக நடந்து கொண்டு உள்ளார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.
மாநிலக் கட்சிள் பெரும்பாலும் அயல்நாட்டு விவகாரங்களில் பங்களிப்பு கொள்வதில்லை. அதைத் தவிர்த்து தேசியக் கட்சிகளான காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும் சீன விவகாரங்களில் எப்படி நடந்து கொண்டுள்ளன என்பதைப் பார்க்கலாம்.
1962ல் சீனா இந்தியா மீது போர் தொடுத்த போது CPI (கம்யூனிஸ்ட் கட்சி) சீனாவை ஆதரித்தது. "மக்கள் நம்மை சைனீஸ் ஏஜென்ட்கள் போல் பார்க்கிறார்கள், ஜவான்களுக்கு நாம் ரத்த தான முகாம் நடத்தலாம்" எனக் கூறிய கம்யூனிஸ்ட் தலைவர் V.S அச்சுதானந்தன் கட்சி விரோத கருத்துகளை கூறியதாக (?!) கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். சீனாவுக்கு ஆதரவாக போராட்டங்கள் செய்ய ஆரம்பித்தவுடன் பல கம்யூனிஸ்ட் தலைவர்களை நேருவே சிறையில் தள்ள நேர்ந்தது.
உலகின் பல நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட்களை தேசியவாதிகள் என்று கூறும் அளவுக்கு தங்கள் நாடுகளை ஆழமாக நேசித்து, அதை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்கள். (சீனா, வியட்நாம், வட கொரியா etc), ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட்கள் கொஞ்சம் வித்தியாசமான பிறவிகள்.
2015ல் சீதாராம் யெச்சூரி சீனா சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளித்தாலும் அது இந்திய சீன உறவுகளை பாதிக்காது என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறவை CCP பெரிதும் மதிப்பதாக ஜி ஜின்பிங் அப்போது கூறினார்.