ஹாங்காங் மக்களிடம் மிருகத்தை விட மோசமாக நடந்துகொள்ளும் சீனா - நாட்டிற்கு எதிராக போராடிய குற்றத்திற்காக மக்களுக்கு கட்டாய டிஎன்ஏ பரிசோதனை!

ஹாங்காங் மக்களிடம் மிருகத்தை விட மோசமாக நடந்துகொள்ளும் சீனா - நாட்டிற்கு எதிராக போராடிய குற்றத்திற்காக மக்களுக்கு கட்டாய டிஎன்ஏ பரிசோதனை!

Update: 2020-07-08 07:15 GMT

சீனா இன்று (புதன்கிழமை) தனது பாதுகாப்பு முகவர்களுக்காக, புதிய அலுவலகத்தை ஹாங்காங்கில் கடுமையான புதிய சட்டத்தின் கீழ் திறந்து, ஒரு ஹோட்டலை படைகளின் தலைமையகமாக மாற்றியது.

"ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிராந்தியத்தில், மத்திய மக்கள் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கான அலுவலகம் புதன்கிழமை காலை இங்கு திறக்கப்பட்டது" என்று சீனாவின் அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது காவல்துறையினர் ஹோட்டலைச் சுற்றியுள்ள சாலைகளைத் தடுத்து, தண்ணீரில் நிரம்பிய தடைகளை அமைத்துள்ளனர்.

சீன மக்கள் குடியரசின் சின்னத்தைத் தாங்கிய ஒரு தகடு ஒரே இரவில் கட்டிடத்தின் மேலே சென்றது. கட்டிடத்திற்கு வெளியே அமைக்கப்பட்ட கம்பத்தில்  சீனக் கொடி கட்டப்பட்டது.

முன்னதாக ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சீனாவின் புதிய சட்டப்படி சேகரிக்கப்பட்டுள்ளன. ஹாங்காங்கை தனது ஆளுமைக்கு உட்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அங்கு அமல்படுத்தி உள்ளது.

இந்தச் சட்டத்தின்படி, போராட்டம் நடத்துபவர்களின் வீடுகளில் முன் அனுமதியின்றி சோதனை செய்யவும், அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், தொலைத் தொடர்புகளைக் கண்காணித்து இடைமறித்து கேட்கவும் முடியும். ஆனால் சீனாவின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு ஹாங்காங் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


Similar News