பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டில் கொரோனா தொற்று பாதிப்பு.!

பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டில் கொரோனா தொற்று பாதிப்பு.!;

Update: 2020-06-30 10:58 GMT

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாற்று மாநில அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் உச்சத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் மும்பையில் உள்ள பாலிவுட் நட்சத்திரங்களின் வீட்டில் வேலை பார்க்கும் பணியாளர்கள் உள்பட சிலர் கொரோனாவால் பாதிக்கப் படுகின்றனர்.


பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டிலும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அவருடைய வீட்டில் வேலை பார்க்கும் பணியாளர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவரை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் மற்றும் மிதி உள்ள பணியாளர்களுக்கு தொற்று இல்லை எனவும் அமீர்கான் தெரிவித்தார்.  

மேலும், அவருடைய அம்மாவிற்கு கொரோனா பரிசோதனை செய்ய இன்று அழைத்து செல்ல உள்ளதாகவும் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடாது என அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.  

Similar News