சீனாவை கண்டித்தும் அந்நாட்டின் பொருட்களை எரித்தும் திபெத் மக்கள் தீவிர போராட்டம்.!
சீனாவை கண்டித்தும் அந்நாட்டின் பொருட்களை எரித்தும் திபெத் மக்கள் தீவிர போராட்டம்.!
சீனா நாட்டின் அட்டுழியத்தை கண்டித்து திபெத் மக்கள் தீவிர போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததில் சீனா தரப்பில் 43 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவின் எப்பிடிப்பட்ட அட்டகாசத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள சிலிகுரியில் இருக்கும் திபெத் மக்கள் தீவிர போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அந்த போராட்டத்தில் சீனா நாட்டின் பொருட்களை எரித்தும் மற்றும் அந்நாட்டின் மொபைல் போன் உள்பட பல தயாரிப்புகளை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர்.