இந்திய வீரர்களின் வேகத்தைக் கண்டு அச்சத்தில் உறைந்த சீனப் படையினர்! வெளிவரும் உண்மைகள்!

இந்திய வீரர்களின் வேகத்தைக் கண்டு அச்சத்தில் உறைந்த சீனப் படையினர்! வெளிவரும் உண்மைகள்!

Update: 2020-06-23 05:28 GMT

கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் எந்த விதத் தூண்டுதலும் இல்லாமல் முன்கூட்டியே திட்டமிட்டு சீன ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி கொடுத்த போது, சீன மக்கள் விடுதலை இராணுவம் (PLA) அதிர்ச்சியடைந்து, மிகவும் பயந்து, பீதியடைந்தது என சண்டே கார்டியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல்களின் படி, சீன வீரர்களைத் துரத்தி சென்ற இந்திய வீரர்கள் 10 பேர் அங்கே கைதிகளாக இரண்டு நாட்கள் கழித்தனர். அவர்களின் கருத்துப்படி இந்திய இராணுவத்தின் சண்டை போடும் வலிமையைக் கண்ட பின்னர் PLA படைகள் "அதிர்ச்சியிலும் அச்சத்திலும்" இருந்ததாக தெரிவித்தனர்.

"நம் படையினர் சிறைபிடிக்கப்பட்டிருந்த காலத்தில் அவர்கள் (சீன படையினர்) மிகவும் பயந்தார்கள். சில மணிநேரங்களுக்கு முன்னர் தான் நம் வீரர்கள் மூர்க்கத்துடன் சண்டை போடுவதை நேரில் கண்டார்கள்,இன்னும் நிறைய பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்து அச்சத்தில் உறைந்திருந்தனர் என்று ஒரு அதிகாரி மேற்கோள் காட்டினார். 




















தாக்குதலின் போது எண்ணிக்கையில் குறைவாக இருந்தபோதிலும், இந்திய இராணுவம் கடுமையான எண்ணிக்கையிலான உயிரிழப்புகளை சீனர்களுக்கு ஏற்படுத்திய பின்னர் சீனப் படையினர் திகிலடைந்ததாக அந்த அதிகாரி கூறுகிறார்.

இந்திய இராணுவ வீரர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தபோதிலும், நம் வீரர்கள் மேம்பட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு , சீனர்களை துரத்த ஆரம்பித்தனர்.

கமாண்டிங் ஆஃபீஸ்ர் கர்னல் சந்தோஷ் பாபுவைக் கொன்றதற்கு பழிவாங்குவதற்காக சீன வீரர்களைக் கொல்லும் நோக்கத்துடன் நம் வீரர்கள் சீனர்களைத் துரத்தி அவர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றனர்.

இந்தியத் தாக்குதலைக் கண்ட சீனப் படைகள் கூட தப்பி ஓடத் தொடங்கின என்றும் சன்டே கார்டியன் தெரிவிக்கிறது.

Similar News