'அதலட்டிக் யோகா' முறையை அறிமுகப்படுத்தி அசத்திய கோவை பள்ளி மாணவர் : இந்தியா சார்பில் சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு.!

'அதலட்டிக் யோகா' முறையை அறிமுகப்படுத்தி அசத்திய கோவை பள்ளி மாணவர் : இந்தியா சார்பில் சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு.!

Update: 2020-06-22 05:24 GMT

பிரதமர் மோடி இந்தியாவில் நம் முன்னோர்களும் ஞானிகளும் கடைபிடித்த யோகாவை உலகம் முழுதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஐ.நா.சபையிடம் யோகா தினம் குறித்து வலியுறுத்தினார். இந்த நிலையில் சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி கடைபிடிக்கப்படும் என ஐ.நா சபை அறிவித்து, அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை கணபதி காந்தி மாநகரை சேர்ந்த நிரஞ்சன் என்ற பள்ளி மாணவர் வீட்டிலிருந்தபடியே யோகா குறித்த பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.தனது ஆறாம் வயது முதல் யோகா கற்று கொள்ள ஆரம்பித்த இவர், தாய்லாந்து,மலேசியா போன்ற பல்வேறு நாடுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வெற்றி பெற்று தங்கபதக்கங்கள் உட்பட பல்வேறு பரிசுகள், விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் விளையாட்டு வீர்ர்களை ஊக்குவிக்கும் வகையில் அத்லெட்டிக் யோகா முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.தற்போது இது குறித்து புதிய முறையில் விளையாட்டு வீரர்கள் இந்த ,யோகா பயிற்சி மேற்கொள்வதால், முதுகுத்தண்டை வலுப்படுத்தவும், சமநிலைப்படுத்தவும் செய்வதாகவும் மேலும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற மனம் குவிப்பு திறன், செயல்திறன் போன்றவை இந்த யோகாவால் மேம்படுவதாகவும், உடல், மனம் உறுதியடைந்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுவதால் விளையாட்டு வீரர்கள் உடற்பநிற்சியோடு இந்த யோகாவையும் செய்வதால் அனைத்து விதமான போட்டிகளிலும் வெற்றிகளை குவிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடைபெற உள்ள சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொள்ள இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

https://www.updatenews360.com/tamilnadu/coimbatore-awareness-of-international-yoga-competition-student-210620/

Similar News