இந்திய எதிர்காலம் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையின் முக்கிய நான்கம்சம் என்ன ?
இந்திய எதிர்காலம் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையின் முக்கிய நான்கம்சம் என்ன ?
சுவாமி விவேகானந்தர் "இந்தியாவின் எதிர்காலம்" என்று ஆற்றிய உரை 100
வருடங்களுக்கு மேல் ஆனபோதும் இந்த காலகட்டத்திலும் நாம் கற்றுக் கொள்வதற்கு எதுவாக நிறைய விஷயங்களை கொண்டுள்ளது. இந்தியாவின் எதிர்காலம் எனும்போது அவர் பொருளாதார அடிப்படையிலான எதிர்காலத்தை பற்றி பேசவில்லை . மாறாக இந்து மதத்தின் அடிப்படையிலான ஆன்மீக வளர்ச்சி பற்றி பேசுகிறார். இந்தியாவை பொறுத்த வரை பொருளாதார வளர்ச்சியை விட ஆன்மீக வளர்ச்சி என்பது அதிக நன்மையை ஏற்படுத்தும்.
"நம் உயிர் நிலை எந்த அளவிற்கு வலிமையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நாம் எந்த நோயோ, தீய பாதிப்போ இல்லாமல் இருக்க முடியும், இந்திய தேசத்தின் உயிர் நாடியானது ஆன்மீகமாகும், அது அற்புதமான தீவிரமான ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. நமது ஆன்மீகம் சமூக பொருளாதார அரசியல் நிலைகளில் இருக்கும் எந்த தேக்கத்தையும் மாற்றி அமைக்கும் தன்மை கொண்டது. வறுமை கூட நமக்கு ஒரு பொருட்டால் ஆன்மிகம் நம்மை கரை சேர்க்கும் தன்மையானதாக இருக்கும் " இதில் சுவாமி விவேகானந்தர் அடிப்படையான நான்கு விஷயங்களை சொல்கிறார்.
முதலாவதாக, இந்தியா ஒரு ஆன்மீக நாடு என்கிற உண்மையை நாம் மறந்து விட்டோம். இரண்டாவதாக சமஸ்கிருதத்தை நாம் நிராகரித்ததால் நம் பண்டைய நூல்களில் உள்ள ரகசியங்களை தெரிந்து கொள்வதில் சிரமப்படுகிறோம். மூன்றாவதாக சாதி மத வேற்றுமைகள் இந்த தேசத்தில் மலிந்து கிடக்கின்றன. நான்காவதாக திறன் சார்ந்த மனிதர்களை உருவாக்குவதற்கு பதிலாக இன்று நாம் கடை பிடிக்கும் கல்வி கொள்கை நம் இயல்பை மறக்க வைத்து நம்மை கீழ்மைப்படுத்துகிறது.