பெங்களூரு சர்ச் மைதானத்தில் காருக்குள் இருந்து கொண்டே நூற்றுக்கணக்கானோர் 'டிரைவின்' முறையில் பிரார்த்தனை.!

பெங்களூரு சர்ச் மைதானத்தில் காருக்குள் இருந்து கொண்டே நூற்றுக்கணக்கானோர் 'டிரைவின்' முறையில் பிரார்த்தனை.!

Update: 2020-06-15 02:10 GMT

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து மத ஆன்மீக ஸ்தலங்களும் 80 நாட்களுக்கும் மேலாக பூட்டப்பட்டு கிடந்தன. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசின் வழிகாட்டுதல் மூலம் சமூக தூர கடைபிடிப்புடன் மீண்டும் ஆன்மீக் ஸ்தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பெங்களூரில் உள்ள அவுட்டர் ரிங் சாலைக்கு அருகிலுள்ள பெத்தேல் ஏஜி சர்ச் சர்வதேச வழிபாட்டு மையத்தின் தேவாலய மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நூற்றுக்கணக்கான கார்கள் வரிசை வரிசையாக அணிவகுத்து நின்றன.

கார் கண்ணாடிகள் திறக்கப்பட்ட நிலையில், டிரைவின் முறையில் காருக்குள் இருந்த கிறிஸ்தவர்கள் வெளியே வராமலேயே எல்.ஈ.டி திரைகள் மற்றும் ஸ்பீக்கர்கள் மூலம் பாதிரிமார்களின் பைபிள் சொற்பொழிவை கேட்டு அதற்கேற்ப கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

Worship On Wheels (WOW) என்ற பெயருடன் நிகழ்ந்த பிரார்த்தனை முறையில், கூட்டத்தை தவிர்ப்பதற்காக கார்களில் வருவோர் மற்றும் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களில் வருவோர், நேரில் வந்து அமர்ந்து பிரார்த்தனை செய்வோர் ஆகியோருக்கு தனித்தனி நேரங்கள் வகுத்து நேற்று பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள மைதானத்தில் நடந்தன.

மாநில அரசின் வழி காட்டுதலின்படி அதிக மக்கள் சர்ச்சுக்குள் திரளாமல் சமூக தூரம் கடைபிடிக்கப்பட்டு இவ்வாறு Worship On Wheels நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக ரெவரெண்ட் ஜான்சன்.வி என்ற ஏற்பாட்டாளர் ஒருவர் கூறினார்.

"அரசாங்க வழிகாட்டுதல்களின்படி, தேவாலயத்திலோ அல்லது வாகனத்திலோ அமர்ந்திருக்கும் வழிபாட்டாளர்களுக்கு இடையே ஆறு அடி தூரம் விடப்பட்டு இருக்கும். வழிபாட்டு சேவைக்கு வரும் ஒவ்வொருவரும், தேவாலயத்திலோ அல்லது உட்கார்ந்த வாகனங்களிலோ இருந்தாலும், எல்லா நேரங்களிலும் முகமூடி அணிய வேண்டும். தேவாலய நுழைவாயிலில் எங்களிடம் வெப்ப ஸ்கேனர்கள் மற்றும் சானிடைசர்கள் உள்ளன, "என்றும் ஜான்சன் கூறினார். மேலும் பிரார்த்தனைக்கு வருவோர் கொண்டு வரும் காணிக்கை பொருட்கள் மூடப்பட்ட பாக்கெட் பொருட்களாக வெளியே வைக்கப்பட்டுள்ள பக்கெட்டுகள் மூலம் பெறப்பட்டது, காணிக்கைகள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது என்றும் அவர் கூறினார். இங்கு இருக்கை வசதிகள், கழிப்பறைகள், குடி நீர், கேன்டீன்கள் போன்ற பொதுவான தொடுதலுக்கான புள்ளிகள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

https://www.thenewsminut e.com/article/bengaluru-church-devotees-attend-sunday-prayers-sitting-their-cars-126507 

How do you attend a church service during a pandemic, ensuring social distancing?

Similar News