மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறாரா ராகுல் காந்தி? மகிழ்ச்சியில் பா.ஜ.க தொண்டர்கள்!

மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறாரா ராகுல் காந்தி? மகிழ்ச்சியில் பா.ஜ.க தொண்டர்கள்!;

Update: 2020-06-25 14:46 GMT

மீண்டும் ராகுல் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக நேற்று (ஜூன் 23) நடைபெற்றது. அதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், கபில் சிபல், குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

காரிய கமிட்டி கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, "ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் எழுப்பினார். அவரின் பரிந்துரையை ஆமோதிக்கும் விதமாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ், ராகுல் காந்தியை கட்சித் தலைவராக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்" என்று ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சியை சார்ந்தவர்களிடம் கேட்ட போது, காங்கிரஸ்காரர்களை விட இவர்கள் மகிழ்ச்சியாக உள்ளது தெரிந்தது. மேலும் "ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான செயல்பாடுகளால் காங்கிரஸ்க்கு வீழ்ச்சியே தவிர அந்த கட்சி அவர் தலைமையில் என்றுமே வளர்ச்சியை சந்தித்ததில்லை, ஆகவே காங்கிரஸ் தலைவராக ராகுல் இருக்கும் பட்சத்தில் அது பா.ஜ.க-வுக்கு சாதகமே என மகிழ்ச்சி பொங்க கூறுகின்றனர்.

Similar News