நடிகர் விஷால் நடித்த 'சக்கர' படத்தின் டிரைலர் நான்கு மொழிகளில் வெளியாகிறது.!

நடிகர் விஷால் நடித்த 'சக்கர' படத்தின் டிரைலர் நான்கு மொழிகளில் வெளியாகிறது.!

Update: 2020-06-25 07:58 GMT

இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால், சிரத்தா சிறீநாத், ரெஜினா இன்னும் பலர் சக்கர படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற நான்கு முனைகளில் வரும் ஜூன் 27ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விஷால் நடிக்கும் தமிழ் படங்கள் எப்போதும் தெலுங்கில் மட்டும் டப்பிங் செய்வது வழக்கம். ஆனால், இந்த முறை அதிகமாக மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.


இந்த ஊரடங்கு சமயத்தில் எந்த ஒரு முன்னணி நடிகர் நடித்துள்ள படத்தின் டிரைலர் வெளியாகவில்லை. இதனை முறியடிக்கும் வகையில் விஷால் நடித்துள்ள சக்கர படத்தின் டிரைலர் நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த ஊரடங்கு முடிந்த பின்னர் திரையரங்குகளில் திறக்கப்பட்ட பின் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.   

Similar News