லடாக் நிலவரம் பற்றி ராணுவ அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை.!

லடாக் நிலவரம் பற்றி ராணுவ அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை.!

Update: 2020-06-22 07:15 GMT

டெல்லியில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி நரவனே, கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தலைமை தளபதி பதூரியா போன்றோர் பங்கேற்றனர். அதில் லடாக் பகுதியில் ராணுவ வீரர்களின் தயார் நிலையை குறித்து பேசியுள்ளனர்.

அந்த சமயத்தில் இந்திய எல்லை பகுதியில் நாடாகும் கட்டுமான பணிகளுக்கு சீனா எதிர்ப்பை காட்டினாலும் அதனை நிறுத்தாமல் தொடர்ந்து பணியை செய்ய வேண்டும் மற்றும் லடாக் எல்லையில் சீனா ராணுவத்தின் மீது இந்திய ராணுவம் கண்காணிப்பை தீவிரமாக ஆக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், எல்லை பகுதியில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எப்படி ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டும் என்பதையும் அந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது.

பின்னர், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக இன்று ரஷ்யா சென்று உள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Similar News