அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி.!

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி.!

Update: 2020-06-27 05:20 GMT

அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதை திருப்பித்தர சட்டத்தில் இடம் இல்லை என்பதால் அந்த நிவாரண நிதியை உயிரிழந்தவர்களின் வாரிசுகள் திருப்பிக் கொடுக்கவில்லை.

அமெரிக்கா அரசு கடந்த மார்ச் மாதம் 180 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கொரோனா நிவாரண நிதி உதவி திட்டங்கள் அறிவித்துள்ளது. அதில் கொரோனாவால் பலியானவர்களுக்கும் 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதனை அமெரிக்கா அரசு கணக்கு தணிக்கை தலைமையகம் கண்டறிந்துள்ளது.

ஆனால், உயிரிழந்தவர்களின் வாரிசுகளிடம் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டதற்கு அவர்கள் எவரும் திரும்ப கொடுக்கவில்லை. ஏனென்றால் பணத்தை திரும்ப தருவதற்கு அமெரிக்கா சட்டத்தில் இடம் இல்லை என்பது தான்.    

Similar News