வாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்தும் புதிய வசதி; முதல் நாடாக பிரேசில் பயன்படுத்துகிறது.!

வாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்தும் புதிய வசதி; முதல் நாடாக பிரேசில் பயன்படுத்துகிறது.!

Update: 2020-06-16 04:21 GMT

இன்று வாட்ஸ்அப் நிறுவனம் பிரேசில் நாட்டில் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டு உள்ளது. அது என்னவென்றால் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் வாட்ஸ்அப் செயலி மூலம் பணம் அனுப்பும் வசதியை செய்துள்ளது. மக்கள் எப்பிடி புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்களோ அதை போல பணம் அனுப்பவும் மற்றும் பெறவும் நிறுவனம் வசதியை செய்துள்ளது. இந்த வசதியை சிறு வணிகங்களை வாட்ஸ்அப்பில் சரியாக விற்பனை செய்வதற்கு அந்நிறுவனம் உதவியுள்ளது.

தற்போது அந்நிறுவனம் கூறியது: இதனை செய்வதற்கு பேஸ்புக் கட்டணம் என்பதை உருவாக்குகிறோம். இது பாதுகாப்பாகவும் மற்றும் எங்கள் பயன்பாடுகள் கொண்டு பணம் செலுத்தும் நிலையான வழியை வழங்குகிறது. இதை சாத்தியமாக்கிய எங்கள் கூட்டு நிறுவனம் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். இதில் பாங்கோ டூ பிரேசில், நுபங்க், சிசிரெடி மற்றும் பிரேசிலில் வணிகர்களுக்கான முன்னணி கொடுப்பனவு செயலியான சியோலோ போன்ற நிறுவனம் கூட இணைத்து பணிபுரிகிறோம்.


வாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்தும் முதல் நாடு பிரேசில் தான். மேலும், இன்னும் பல நாடுகளுக்கு விரைவில் கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.


Similar News