பல கோடிக்கு தி.மு.க கம்பெனியை அடகுவைத்து, கார்ப்பரேட் காலை பிடித்தது ஏன்.? உதயநிதியை லெப்ட் அண்டு ரைட்டு வெளுத்து வாங்கிய சிங்கை ராமச்சந்திரன்!

பல கோடிக்கு தி.மு.க கம்பெனியை அடகுவைத்து, கார்ப்பரேட் காலை பிடித்தது ஏன்.? உதயநிதியை லெப்ட் அண்டு ரைட்டு வெளுத்து வாங்கிய சிங்கை ராமச்சந்திரன்!

Update: 2020-06-26 15:37 GMT

அரசியலுக்காக எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் இறங்கிச்செல்வோம் என்பதை, திமுக சமீப காலமாக நிரூபித்து வருவதை கண்கூடாக காண முடிகிறது.

கால் நோவ வயல் வெளியில் இறங்கி வேலை பார்க்கும் விவசாயின் உழைப்பை சுரண்டிக்கொண்டு, சந்தடி கேப்பில் உள்ளே நுழைந்து இலாபம் பார்க்கும் இடைத்தரகர் போல, வாரிசு கோட்டாவில் கட்சிக்குள் நுழைந்து, அதிகார போதையில் வாய்க்கு வந்ததை பேசும் போக்கும் அதிகரித்து வருகிறது. 

அந்த வகையில் சமீபத்தில், தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து, உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், " 10ம் வகுப்பு தேர்வு ரத்து, ரூ.1000, ரேஷன் பொருள், நடமாடும் சோதனை நிலையம் என தலைவர் ஸ்டாலின் அவர்களின் அறிக்கைகளே ஓரளவுக்கேனும் உங்களை செயல்பட வைக்கின்றன. தன் இருப்பைகாட்ட அறிக்கை விடவேண்டிய அவசியம் அவருக்கில்லை. ஏனெனில் அவர் உழைப்பை நம்புவர்; மற்றவரின் கால்களை அல்ல " என்று கூறியிருந்தார்.


Full View


இதற்கு பதிலடி கொடுத்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மேற்கு மண்டல தலைவர் சிங்கை ராமச்சந்திரன், "உழைப்பை மட்டுமே நம்புபவர் பல கோடிக்கு திமுக கம்பெனியை அடகுவைத்து, கார்ப்பரேட் காலை பிடித்தது ஏன்? சுயமரியாதையும், சுயஅறிவையும் வடநாட்டு மூளையிடம் அடகுவைத்து, தன் இருப்பைக் காட்டிக் கொள்ளத்தானே வெற்று அறிக்கையை தினந்தோறும் விடுகிறார்" என்று கூறியிருக்கிறார்.

எப்படி மாற்றி மாற்றி பேசினாலும், இந்த காலத்தில் ஆதாரத்தோடு கையும் களவுமாக சிக்கிவிடுவோம் என்ற அடிப்படை அரசியல் அறிவு இல்லாமல், கத்துகுட்டி போல செயல்பட்டு வரும் உதயநிதியின் செயல்பாடு, கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.





 




 


Similar News