கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் தப்பி ஓட்டம்.!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் தப்பி ஓட்டம்.!

Update: 2020-06-10 03:46 GMT

சென்னை காசிமேட்டில் இருக்கும் சிறுவர் காப்பகத்தில் தங்கி வந்த 35 சிறுவர்களுக்கு சென்ற ஏழாம் தேதி கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர்களை தண்டையார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் தப்பி ஓடியுள்ளான்.

இதன் மூலம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. தற்போது காவல்துரையினர் சிறுவனை தேடும் வேலை ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்பே சென்னை ராஜீவ் காந்தி இருந்து மருத்துவமனையில் நான்கு நோயாளிகள் தப்பித்துள்ளனர்.

மேலும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் இது வரை இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  

Similar News