சுகாதார அவசரக் காலத்தின் நடுவில் இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினம்.!

சுகாதார அவசரக் காலத்தின் நடுவில் இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினம்.!

Update: 2020-06-11 07:43 GMT

சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஒரு சுகாதார அவசரக் காலத்தின் நடுவில் இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினம் வருகிறது.

பொது யோகா செய்முறையின் தினசரி ஒளிபரப்பை பிரசார் பாரதியுடன் இணைந்து தூர்தர்ஷன் பாரதியில், ஆயுஷ் அமைச்சகம் 11 ஜூன், 2020 முதல் நடத்துகிறது. தினமும் காலை 8 மணி முதல் 8:30 மணி வரை பொது யோகா செய்முறை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். அமைச்சகத்தின் சமூக ஊடகப் பக்கங்களிலும் இந்த நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் கிடைக்கும். பொது யோகா செய்முறையின் அனைத்து அம்சங்களையும் இந்த அரை மணி நேர நிகழ்ச்சி வழங்கும்.

தொலைதூர முறையின் மூலம் மக்களுக்கு ஒளி-ஒலி செயல் விளக்கத்தை வழங்கி பொது யோகா செய்முறை குறித்து அவர்களை நன்றாக அறியச் செய்வதே இந்த ஒளிபரப்பின் நோக்கமாகும். பொது யோகா செய்முறை குறித்து முன்னரே அறிந்திருப்பது சர்வதேச யோகா தினம் 2020-க்காக நன்றாகத் தயாராகி அதில் சிறப்பாக பங்குபெற மக்களுக்கு உதவும்.

யோகாவின் பல்வேறு அம்சங்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஒரு மேற்கோள் ஆதாரமாகவும், யோகாவை தினமும் செய்வதன் மூலம் நன்மைகளைப் பெறவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பொது யோகா செய்முறை நிகழ்ச்சிகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 

Similar News