சே குவேரா: 'புரட்சியாளன்' எனும் வெள்ளை சாயம் பூசப்பட்ட கொலைகாரன்! மறுமுகம் என்ன?
சே குவேரா: 'புரட்சியாளன்' எனும் வெள்ளை சாயம் பூசப்பட்ட கொலைகாரன்! மறுமுகம் என்ன?
சே குவேரா என்ற பெயர் புரட்சியாளன் என்ற பெயருடன் உலகெங்கிலும் அடையாளப்படுத்தப்படுகிறது. டி-ஷர்ட்கள் மூலம் உலகின் பல மூலைகளிலும் பிரபலமான போராளி அவராகத் தான் இருக்கும். அதை அணியும் பாதி இளைஞர்களுக்காவது அவர் வாழ்க்கையின் முழு வரலாறும், நடவடிக்கைகளின் பின்னணியும் தெரியுமா என்பது சந்தேகம் தான். புரட்சி, போராளி என்ற வார்த்தைகள் அதற்கடியில் வாழ்ந்த, அதனால் பாதிக்கப்பட்ட மக்களைத் தவிர அனைவருக்கும் இனிப்பாகத் தான் இருக்கும். குறிப்பாக கம்யூனிஸ்ட் புரட்சிகள். கம்யூனிஸ்ட் ஆட்சிகளும், அதன் தலைவர்களும் சர்வாதிகார ஆட்சியை இரும்புத் திரைகளுக்கு பின்னால் இப்போது வரை நடத்தினாலும், ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டு அதற்கு ஏங்குவோரும் இருக்கத் தான் செய்கிறார்கள் எனும் போது 50 ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த ஒருவரின் கொடூரங்களுக்கு 'புரட்சியாளன்' என்ற வெள்ளை சாயம் பூசுவது கடினமான விஷயம் இல்லை. ஆனால் அதைத் தோலுருத்துக் காட்டுவது நம் கடமை.
1. சேவுக்கு கொலைகள் செய்வது மிகவும் பிடிக்கும்
அவருடைய டைரிகளில் எதிரியை கொலை செய்த பிறகு வரும் இரத்தவாடை பிடிக்கும் என்று எழுதும் அளவுக்கு சேவுக்கு கொலைகள் பிடிக்கும். புரட்சி என்றாலே பல கொலைகள் செய்வதும் அடக்கம். கியூபா புரட்சி வெற்றியடைந்த பிறகு, எதிர்த் தரப்புக்கு உதவி செய்ததாக கூறி பல ஆயிரக்கணக்கான மக்களை, விவசாயிகளை, எந்த வித உரிய நீதி நடைமுறைகளுமின்றி கங்காரு நீதிமன்றம் போல சுட்டுக் தள்ள உத்தரவிட்டார். அவரது நெருங்கிய புரட்சியாளர்கள் இப்படி செய்ய வேண்டாம் என்று கூறிய போது சேவின் பிரபலமான வார்த்தைகள் இவை.
இதை அவர் கூறியிருப்பது சந்தேகம் என்று நீங்கள் நினைத்தால், 1964-ல் இந்தக் கொலைகளை பற்றி கேள்வி வந்த போது, ஐ.நா சபையில் உலக நாடுகளின் முன்னிலையில் அவர் கூறிய பதில் இது,
புரட்சிக்கு 'எதிரானவர்களை' கொன்று தீர்த்த பின், அவரது அடுத்த குறி ஓரினச்சேர்க்கையாளர்கள், அரசாங்கத்துக்கு எதிராகக் கருத்து கூறுபவர்கள். கம்யூனிஸ்ட் நாடுகளில் 'corrective work camp' பொதுவானவை. சீனா, வட கொரியா போன்ற நாடுகளில் அவை இன்றும் உள்ளன. மிக மிக மோசமான நிலைமையில் அங்கிருப்பவர்கள் கொடுமைப்படுத்தப்படுவார்கள். சாண்டா கார்லா, லா கபானா ஆகிய இரண்டு இடங்களில் இத்தகைய சிறைகளை சே ஆரம்பித்தார். ஆயிரக்கணக்கான மக்கள் இங்கே சுட்டுக் தள்ளப்பட்டனர். நூற்றுக்கணக்கான மக்களை சே தன் சொந்தக் கைகளால் கொன்றார்.