சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தால் புதுச்சேரியில் மீண்டும் இடம் மாறும் பெரிய மார்க்கெட்.!

சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தால் புதுச்சேரியில் மீண்டும் இடம் மாறும் பெரிய மார்க்கெட்.!

Update: 2020-06-15 12:44 GMT

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனிடையே நேரு வீதியில் இயங்கும் பெரிய மார்க்கெட்டில் வியாபாரிகளும், பொதுமக்களுக்கும் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என்றும் காய்கறி, பழங்கள் வாங்க மக்கள்அதிக அளவில் வருவதால் பெரிய இடத்தில் காய்கறி கடைகள் மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது அதன்படி, நகர பகுதியில் உள்ள ஏஎப்டி மைதானத்தில் காய்கறி, பழக்கடைகளை கொண்டு சென்றால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே சமூக இடைவெளியையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். மேலும், கொரோனா வைரஸ் தொற்றையொட்டி மத்திய அரசின் வழிகாட்டுதலையும் இதன் மூலம் கடைபிடிக்க முடியும்.


பெரிய மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த அனைத்து மொத்தம் மற்றும் சில்லரை காய்கறி கடைகள் வரும் 17ம் தேதிக்குள் மூடப்பட வேண்டும். அதன்பிறகு ஏஎப்டி திடலில் காய்கறி கடைகள் செயல்படும். புதுச்சேரி நகராட்சி ஆணையர் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்து அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதோடு, அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும். எஸ்பி (கிழக்கு) மற்றும் போக்குவரத்து எஸ்பி ஆகியோர் இந்த இடத்தில் மார்க்கெட் செயல்படுவதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என மாவட்ட ஆட்சியர் அருண் தகவல் தெரிவித்துள்ளார்.  

Similar News