சாஹோ படத்தின் இயக்குனரின் நிச்சயதார்தம் எளிமையான முறையில் நடைபெற்றது.!

சாஹோ படத்தின் இயக்குனரின் நிச்சயதார்தம் எளிமையான முறையில் நடைபெற்றது.!

Update: 2020-06-11 13:23 GMT

பாகுபலி படத்தை அடுத்து பிரபாஸ் சுஜீத் என்ற இயக்குனர் சாஹோ படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் சுஜீத் புகழ்பெற்றவர். மேலும், தற்போது இயக்குனர் சுஜீத் மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளியான லூசிபர் படத்தை சிரஞ்சீவியை வைத்து ரீமேக் செய்து படம் எடுக்கும் வேலையில் உள்ளார்.


இந்நிலையில் சினிமாவை அடுத்து திருமண வாழக்கையில் அடியெடுத்து வைக்கிறார் இயக்குனர் சுஜீத். மணப்பெண் பெயர் பிரவல்லிகா. இவர் பல் மருத்துவராக பணிபுரிகிறார். இவருடைய டிக்டாக் பாடல் வீடியோக்கள் மிகவும் வைரல். தற்போது இவர்கள் இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று ஜூன்10ஆம் தேதி ஐதராபாத்தில் மிக எளிமையான முறையில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் இவர்களுடைய திருமண தேதி ஊரடங்கை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.  

Similar News