கொடூரமான கொலை குற்றவாளியை 'மாணிக்க தொண்டர்' என பாராட்டிய கேரள முதல்வர் பினராயி விஜயன்! இணைய தளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

கொடூரமான கொலை குற்றவாளியை 'மாணிக்க தொண்டர்' என பாராட்டிய கேரள முதல்வர் பினராயி விஜயன்! இணைய தளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Update: 2020-06-13 05:49 GMT

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த கட்சிக்காரர்களில் ஒருவர் குஞ்சனாதன் ( வயது 72) முதல்வர் பினராய்க்கு மிகவும் நெருக்கமான ஆதரவாளர். இவர் தனது சக கட்சிக்காரரான கோழிக்கோட்டை சேர்ந்த சந்திரசேகர் என்பவரை உள்கட்சி தகராறில் கத்தியால் 52 முறை குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் முதன்மை குற்றவாளியாவார். இது மட்டுமல்லாமல் ஏராளமான வழக்குகளும் இவர் மீது உண்டு. இது தொடர்பாக சென்ற 2014 ஜூலை மாதம் கோர்ட் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

ஆனால் பினராயி விஜயன் சென்ற 2016 ஆம் ஆண்டு முதல்வரானதும் இவர் மருத்துவ சோதனை என்ற பெயரில் ஜாமீன் பெற்றுக் கொண்டு வெளியே வந்தவர் மறுபடி சிறைக்கு செல்லவில்லை. மீண்டும், மீண்டும் உடல்நிலையை காரணம் காட்டி வெளியே கட்சி வேலையை பார்த்து வந்தார். இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் சென்ற வாரம் மரணம் அடைந்தார். அவருடைய இறுதி அஞ்சலி நேற்று முன்தினம் நடை பெற்றது. இதில் பங்கேற்ற பினராயி விஜயன் சந்திரசேகர் கட்சியின் மிக ச்சிறந்த வீரன், சிறந்த தலைவன், மதிப்பு மிக்க தொண்டன், மாணிக்க தொண்டன் என்றெல்லாம் வர்ணித்தார்.

அது மட்டுமல்லாமல் தனது முகநூலிலும் குஞ்சனாதனை மிகச்சிறந்த தலைவனாக போற்றி புகழ்ந்திருந்தார்.

சக கட்சிக்காரரையே கொடூரமான கொலை செய்துவிட்டு ஜாமீனில் வெளி வந்த ஒரு குற்றவாளிக்கு இப்படி ஒரு மரியாதையை ஒரு முதல்வரே வெளிப்படையாக தரலாமா ? என்னதான் ஆதரவாளராக இருந்தாலும் அதற்காக ஒரு கொலைகாரனை விழா எடுத்து கொண்டாடுவதா? என கேரள நெட்டிசன்கள் விஜயனை கிண்டலடித்து வருகின்றனர். மேலும் இடதுசாரிகள் ஒரு கொலைகாரர்கள், அவர்களது கட்சி கொலைகார கட்சி என்பதை இந்த சம்பவங்கள் கூறுவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.     

https://www.opindia.com/2020/06/kerala-cm-pinarayi-vijayan-cpim-leaders-tribute-pk-kunjananthan-convict-murder-details/

Similar News