சீனா இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதா? ராகுல் காந்திக்கு பாடம் எடுத்த லடாக் எம்பி.!

சீனா இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதா? ராகுல் காந்திக்கு பாடம் எடுத்த லடாக் எம்பி.!

Update: 2020-06-12 03:22 GMT

வழக்கம் போல தேசிய பாதுகாப்பு பற்றிய விஷயம் என்று கூடப் பார்க்காமல்‌ மோடி அரசை விமர்சித்தால் போதும்‌ என்று கிளம்பி இருக்கும் ராகுல் காந்தி, "கைச் சின்னத்தைப் பற்றி பேசி‌ முடித்த பிறகு பாதுகாப்பு அமைச்சர் இதற்கு பதில் சொல்வாரா? லடாக்கில் இருக்கும் இந்தியப் பகுதிகளை சீனா‌ ஆக்கிரமித்துள்ளதா?" என்று தனது‌ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மறுநாளே, இதற்கு லடாக் மக்களவை உறுப்பினர் ஜம்யங் ட்ஷெரிங் நம்க்யல் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், இந்திய பகுதிகளில் ‌சீன ஊடுருவல் எங்கெல்லாம் நடந்தது, எப்போதெல்லாம் நடந்தது, குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை பகுதிகளை நாம்‌ இழந்தோம் என்று பட்டியலிட்டு ராகுல் காந்திக்கு பாடம் எடுத்தார்.

ராகுல் காந்தியின் கேள்விக்கு பதிலளித்து பதிவிட்ட ஜம்யங், " ஆம் சீனர்கள் இந்திய பகுதியை ஆக்கிரமித்துள்ளார்கள்" என்று கூறி லடாக்கில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தபோது சீனா ஆக்கிரமித்த பகுதிகளை பட்டியலிட்டுள்ளார்.

  • அக்சாய் சின் (37,244 சதுர கிமீ) - 1962
  • சுமுர்பகுதியில் உள்ள டியா பங்னக் மற்றும் சப்ஜி பள்ளத்தாக்கு (250‌ கிமீ) - காங்கிரஸ் அரசின் காலத்தில் 2008 வரை
  • சீனஇராணவத்தால் 2008ல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஜொராவர் கோட்டை தரைமட்டமாக்கப்பட்டு 2012ல் அதே காங்கிரஸ் ஆட்சியின்‌ போது‌ அங்கு சீன கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு 13 சிமெண்ட் வீடுகளும் கட்டப்பட்டன.
  • டுங்டிமற்றும் டெம்ஜோக் பகுதிகளுக்கு இடையே உள்ள பழங்கால வணிக வர்த்தக முனையான டூம் செலேவை 2008-2009 காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியா சீனாவிடம் இழந்தது

"காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2012 வரை சீனா ஊடுருவியிருந்த டெம்ஜோக் பகுதி இது தான்" என்று ஒரு வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

மேலும், "உண்மைகளை எடுத்துரைக்கும் இந்த பதிலை ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் தவறான தகவல்களை பரப்ப முனைய மாட்டார்கள் என்று நம்புகிறேன்" என்றும் இடித்துரைத்துள்ளார்

இந்திய-சீன படைகளுக்கிடையே லடாக்கில் எல்லைப் பகுதியில் இந்தப் பிரச்சினை ஆரம்பித்ததிலிருந்து எந்த ஆதாரமும் இல்லாமல் சீனா லடாக்கில் இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து விட்டது என்று அரசியல் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார் ராகுல்காந்தி. தேசப் பாதுகாப்பு குறித்த முக்கியமான இவ்விஷயத்தில் பொறுப்பின்றி பேசி வருவதாகவும் இது தேச நலனுக்கு எதிரானது என்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News