சாத்தான்குளம் விவகாரத்தில் ரஜினி அடுத்து களம் இறங்கிய கமல்.!

சாத்தான்குளம் விவகாரத்தில் ரஜினி அடுத்து களம் இறங்கிய கமல்.!

Update: 2020-06-29 03:42 GMT

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் திடீரென அவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதல் காரணமாக தான் இருவரும் மரணமடைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் சற்று முன் வெளியான தகவலின்படி ஆய்வாளர் ஸ்ரீதர் என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயராஜ் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார் என்ற செய்தியை சற்று முன்னர் பார்த்தோம்

இந்த நிலையில் ரஜினியை அடுத்து *கமல்ஹாசன்* அவர்களும் ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் குடும்பத்தினர்களுடன் தொலைபேசியில் ஆறுதல் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அதுமட்டுமின்றி *மக்கள் நீதி மய்யத்தின்* பொதுச்செயலாளர் அருணாச்சலம் என்பவரும் ஜெயராஜ் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

Similar News