பிரபல நடிகர் அனில் முரளி உடல்நலக்குறைவால் திடீர் மரணம்..!

பிரபல நடிகர் அனில் முரளி உடல்நலக்குறைவால் திடீர் மரணம்..!

Update: 2020-07-30 09:38 GMT

நடிகர் அனில் முரளி பிரபல நடிகர். இவர் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதை வென்றவர். இவர் தற்போது கொச்சினில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கல்லீரல் பிரச்சனையால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பிரித்திவிராஜ்,மம்முட்டி, நடிகை மாலா பார்வை மற்றும் பல திரைப்பட கலைஞர்கள் நட்சத்திரங்கள் ஆகியோர் இவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் 1993 ஆம் ஆண்டு வினயனின் கன்னியாகுமரியில் ஒரு கதை மூலம் அறிமுகமானார்.பின்னர் குறிப்பிடத்தக்க வில்லன் கேரக்டரில் நடித்து மிகப்பெரிய பிரபலமானார். இவர் மலையாளம் தவிர தமிழ் தெலுங்கு ஆகிய 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஜுமா இவரது மனைவி. இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அடுத்து அடுத்து நிகழும் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Similar News