ரயில்வேக்கான கொள்முதல் செயல்பாட்டில் மேக் இன் இந்தியா தயாரிப்புகளை மேம்படுத்த நடவடிக்கை - பியூஷ் கோயல்.!
ரயில்வேக்கான கொள்முதல் செயல்பாட்டில் மேக் இன் இந்தியா தயாரிப்புகளை மேம்படுத்த நடவடிக்கை - பியூஷ் கோயல்.!
இந்திய ரயில்வே மற்றும் இந்திய அரசாங்கத்தின் கொள்முதல் செயல்பாட்டில் மேக் இன் இந்தியா தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே மற்றும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் திரு. பியூஷ் கோயல் ஆய்வு செய்தார். கூட்டத்தின் போது, திரு. பியூஷ் கோயல் இந்திய ரயில்வேயில் ஊழல் இல்லாத வெளிப்படையான கொள்முதல் சூழலில் தொழில்துறையில் நம்பிக்கையை உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
கொள்முதல் செயல்பாட்டில் மேக் இன் இந்தியா தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்யும் போது, கொள்முதல் செயல்பாட்டில் உள்ளூர் விற்பனையாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. உள்ளூர் விற்பனையாளர்கள் / சப்ளையர்களிடமிருந்து அதிக ஏலங்களைப் பெறக்கூடிய வகையில் கொள்முதல் செய்யும் உள்ளூர் உள்ளடக்க விதிமுறை இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இது சுயசார்பு இந்தியா இயக்கத்திற்கு ஊக்கமளிக்கும். இந்த திசையில் இந்திய ரயில்வேயின் முயற்சிகளை எளிதாக்குவதற்கு, தேவைப்பட்டால், பொருத்தமான கொள்கைத் திருத்தங்களை செய்ய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) ஆதரவு கோரப்பட்டது.
மேக் இன் இந்தியாவை மேம்படுத்துவது குறித்து விளக்கிய ரயில்வே வாரிய உறுப்பினர் (பொருள்கள் மேலாண்மை), GeM மூலம் பொருள்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்த விரிவான விளக்கக்காட்சியும் பகிரப்பட்டது. மறுஆய்வுக் கூட்டத்தில் ரயில்வே மாநில அமைச்சர் திரு. சுரேஷ் சி அங்கடி, ரயில்வே வாரிய உறுப்பினர்கள், தலைமை நிர்வாக அதிகாரி / GeM மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.