கொரோனா வைரஸ் காரணத்தினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து - சௌரவ் கங்குலி தகவல்.!

கொரோனா வைரஸ் காரணத்தினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து - சௌரவ் கங்குலி தகவல்.!

Update: 2020-07-09 12:12 GMT

இந்த ஆண்டு ஆசிய கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியை நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உரிமையைப் பெற்றது. ஆனால், இந்த உரிமையை இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு கொடுப்பதாகவும், அடுத்து வரும் ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை பெற்ற இலங்கை அதை பாகிஸ்தான் வாரியத்துக்கு கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.


இந்நிலையில் பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சௌரவ் கங்குலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் நேற்று பேசினார். அதில் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த ஆசிய உலககோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணத்தினால் ஆசிய உலக கோப்பை போட்டி ரத்து செய்யும் சூழ்நிலைஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மணியும் தெரிவித்துள்ளார்.

மேலும், அக்டோபர் - நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை போட்டியை ஒத்திவைப்பது பற்றி நாளை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐபில் போட்டியும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News