அருணாச்சல பிரதேசத்தில் பழங்குடியின கடவுள் உருவப்படங்களை எரித்த பாதிரியார் - மத, கலாச்சார அமைப்புகள் வழக்கு பதிவு!

அருணாச்சல பிரதேசத்தில் பழங்குடியின கடவுள் உருவப்படங்களை எரித்த பாதிரியார் - மத, கலாச்சார அமைப்புகள் வழக்கு பதிவு!

Update: 2020-07-07 14:41 GMT

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் பழங்குடியினரின் கடவுள் படங்கள் மற்றும் சிலைகளை எரித்து சேதப்படுத்தியதாக பென்டகோஸ்டல்(பெந்தகொஸ்தே) பிரிவைச் சேர்ந்த பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தை 'கிறிஸ்துவின் ராஜ்ஜியம்! கிறிஸ்தவ நாடு' என்று அறிவிக்கும் அளவு மிஷனரி ஆதிக்கம் நிறைந்த வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பான்மையினராக இருந்து மத மாற்றம் செய்யப்பட்ட பழங்குடியினரின் மத நம்பிக்கைகள் புண்படுத்தப்படுவது வாடிக்கையாகி விட்டது. தற்போது ஐன் டோன்யி(Ain Donyi) எனும் பழங்குடியினர் வணங்கும் சூரிய பெண் கடவுளின் உருவப்படங்களை இயேசுவின் பேரைச் சொல்லி எரித்ததாக ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது.

இந்த வீடியோவில் "Praise the Lord! In the name of Jesus" என்று சொல்லிக் கொண்டே பாதிரியாரும் அவருடன்‌ இருப்பவர்களும் ஏதோ எரிபொருளை ஊற்றி கடவுள் படங்களை எரிக்கின்றனர். இது தங்களது மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாக உள்ளது என்று கிழக்கு கமெங் மாவட்ட மத மற்றும் கலாச்சார அமைப்புகள் புகார் அளித்துள்ளன.

இதையடுத்து அருணாச்சல பிரதேசத்தில் அமலில் உள்ள மத சுதந்திர சட்டத்தின் பிரிவுகள் 3,4 மற்றும் 5ன் கீழ் பாதிரியாரின் செயல்கள் குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளதால் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் சட்டத்தின் 295A மற்றும் 298 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Similar News